உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
24 திங்கள்

கொழும்பு நகர்ப்புற சமூகத்தின் பணவீக்கம் அதிகரிப்பு.!

இலங்கை செய்திகள் 7 மாதங்கள் முன்
21 பார்வைகள்

2026 ஜனவரியில் கொழும்பு நகர்ப்புற சமூகத்தின் பணவீக்கம் அதிகரித்துள்ளதாக தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது. ஜனவரி மாதத்திற்கான கொழும்பு நுகர்வோர் விலைச்சுட்டெண் மற்றும் கொழும்பு நகர்ப்புற சமூகத்தின் நுகர்வோர் பணவீக்க விகிதம் ஆகியவற்றைத் தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் வெளியிட்டு இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளது.

அதற்கமைய, குறித்த சமூகத்தின் நுகர்வோர் பணவீக்க விகிதமானது 2026 ஜனவரி மாதத்தில் 2.3% ஆக அதிகரித்துள்ளது.இது 2025 டிசம்பர் மாதத்தில் 2.1% ஆகப் பதிவாகியிருந்தது. 2026 ஜனவரி மாதத்தில் உணவுப் பிரிவின் வருடாந்த பணவீக்கம் (புள்ளிக்கு புள்ளி) 3.3% ஆக அதிகரித்துள்ளதுடன், 2025 டிசம்பர் மாதத்தில் இது 3.0% ஆகக் காணப்பட்டது.அதேவேளை, உணவு அல்லாத பிரிவின் வருடாந்த பணவீக்கம் (புள்ளிக்கு புள்ளி) 2025 டிசம்பர் மாதத்தில் 1.8% ஆகக் காணப்பட்டதுடன், 2026 ஜனவரி மாதத்திலும் அந்தப் பெறுமதி 1.8% ஆக மாற்றமின்றி நிலவுவதாகத் தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

அரசு விடுவித்த காணாமல் போனோர் பற்றிய தகவல்களைத் தாருங்கள் – காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் கோரிக்கை

அரசு விடுவித்த காணாமல் ஆட்கள் பற்றிய தகவல்களைத் தாருங்கள். அது தான் சர்வதேச காணாமல் ஆக்கப்பட்ட தினத்தில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு அரசு செய்கின்ற நியாயமான செயலாக…

78 0 0
இலங்கை செய்திகள்

மன்னாரில் 2 ஆயிரம் மெட்ரிக் தொன் அளவிலான நெல்லைக் கொள்வனவு செய்ய நடவடிக்கை

மன்னார் மாவட்டத்தில் நெல் சந்தைப்படுத்தல் சபையின் ஊடாக 2 ஆயிரம் மெட்ரிக் தொன் அளவிலான நெல்லைக் கொள்வனவு செய்வதற்கு நடவடிக்கை- மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன்…

59 0 0
இலங்கை செய்திகள்

அரசின் தொலைநோக்கற்ற ஆட்சியால் மக்கள் பேரவலம் – சஜித் குற்றச்சாட்டு

அரசின் தொலைநோக்கற்றஆட்சியால் மக்கள் பேரவலம் தற்போதைய அரசின் தொலைநோக்கற்ற ஆட்சியினால் நாட்டின் மக்கள் பாரிய அவதிக்குள்ளாகியுள்ளனர் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார். பொய்கள் மற்றும்…

55 0 0
இலங்கை செய்திகள்

அக்கரைப்பற்று மண்ணுக்கு பெருமை சேர்த்த மல்யுத்த வீரர்.!

2026ஆம் ஆண்டுக்கான Inter University Wrestling Championship மல்யுத்தப் போட்டியில் 70 கிலோ எடைப்பிரிவில் அக்கரைப்பற்றைச் சேர்ந்த I.F. Angelo முதலாம் Runner-Up இடத்தைப் பெற்று வெள்ளிப்…

56 0 0