உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
24 திங்கள்

இலங்கையின் 78 ஆவது சுதந்திர தின நிகழ்வுக்கு வெளிநாட்டுப் பிரமுகர்களுக்கு அழைப்பு இல்லை.!

இலங்கை செய்திகள் 7 மாதங்கள் முன்
18 பார்வைகள்

இலங்கையின் 78 ஆவது சுதந்திர தின நிகழ்வுக்கு வெளிநாடுகளில் இருந்து பிரமுகர்கள் அழைக்கப்படவில்லை. ஜனாதிபதி தலைமையிலேயே நிகழ்வுகள் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் 78 ஆவது சுதந்திர தின நிகழ்வு எதிர்வரும் 4 ஆம் திகதி “கட்டியெழுப்புவோம் இலங்கையை” எனும் கருப்பொருளின் கீழ் சுதந்திர சதுக்கத்தில் நடைபெறவுள்ளது.

இதற்குரிய ஏற்பாடுகள் தொடர்பில் தெளிவுபடுத்தும் ஊடக சந்திப்பு அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்றது.

பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி துறை அமைச்சர் பேராசிரியர் சந்தன அபேரத்ன, அமைச்சின் செயலாளர், பாதுகாப்பு செயலாளர், பொலிஸ்மா அதிபர் உள்ளிட்டோர் ஊடக சந்திப்பில் பங்கேற்றிருந்தனர்.

இதன்போது வெளிநாட்டுப் பிரமுகர்கள் அழைக்கப்பட்டுள்ளனரா என்ற கேள்விக்குப் பதிலளித்த அமைச்சர் பேராசிரியர் சந்தன அபேரத்ன,
“கொழும்பிலுள்ள தூதுவர்கள், உயர்ஸ்தானிகர்கள், இராஜதந்திரிகள் மற்றும் வெளிவிவகாரத்துறையுடன் தொடர்புடையவர்கள் பங்கேற்பார்கள். வெளிநாடுகளில் இருந்து பிரமுகர்கள் அழைக்கப்படவில்லை.” – என்று குறிப்பிட்டார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

அரசு விடுவித்த காணாமல் போனோர் பற்றிய தகவல்களைத் தாருங்கள் – காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் கோரிக்கை

அரசு விடுவித்த காணாமல் ஆட்கள் பற்றிய தகவல்களைத் தாருங்கள். அது தான் சர்வதேச காணாமல் ஆக்கப்பட்ட தினத்தில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு அரசு செய்கின்ற நியாயமான செயலாக…

61 0 0
இலங்கை செய்திகள்

மன்னாரில் 2 ஆயிரம் மெட்ரிக் தொன் அளவிலான நெல்லைக் கொள்வனவு செய்ய நடவடிக்கை

மன்னார் மாவட்டத்தில் நெல் சந்தைப்படுத்தல் சபையின் ஊடாக 2 ஆயிரம் மெட்ரிக் தொன் அளவிலான நெல்லைக் கொள்வனவு செய்வதற்கு நடவடிக்கை- மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன்…

59 0 0
இலங்கை செய்திகள்

அரசின் தொலைநோக்கற்ற ஆட்சியால் மக்கள் பேரவலம் – சஜித் குற்றச்சாட்டு

அரசின் தொலைநோக்கற்றஆட்சியால் மக்கள் பேரவலம் தற்போதைய அரசின் தொலைநோக்கற்ற ஆட்சியினால் நாட்டின் மக்கள் பாரிய அவதிக்குள்ளாகியுள்ளனர் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார். பொய்கள் மற்றும்…

55 0 0
இலங்கை செய்திகள்

அக்கரைப்பற்று மண்ணுக்கு பெருமை சேர்த்த மல்யுத்த வீரர்.!

2026ஆம் ஆண்டுக்கான Inter University Wrestling Championship மல்யுத்தப் போட்டியில் 70 கிலோ எடைப்பிரிவில் அக்கரைப்பற்றைச் சேர்ந்த I.F. Angelo முதலாம் Runner-Up இடத்தைப் பெற்று வெள்ளிப்…

56 0 0