உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
24 திங்கள்

தேங்காய் எண்ணெய் தொடர்பில் மக்களுக்கு எச்சரிக்கை.!

இலங்கை செய்திகள் 7 மாதங்கள் முன்
25 பார்வைகள்

தேங்காய் எண்ணெய் மற்றும் பாம் எண்ணெய் ஆகியவற்றின் மீது நிலவும் விசேட வரியை நீக்குவதற்கு அரசாங்கம் முன்வைத்துள்ள வரவு செலவுத் திட்ட யோசனை காரணமாக, தேங்காய் எண்ணெயுடன் உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் எண்ணெய் வகைகளைக் கலந்து சந்தைக்குக் கொண்டுவரும் அபாயம் உள்ளதாக நுகர்வோர் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான தேசிய இயக்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

கொழும்பில் நேற்று (30) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த நுகர்வோர் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான தேசிய இயக்கத்தின் தலைவர் ரஞ்சித் விதானகே,

இதன் மூலம் உள்ளூர் தேங்காய் எண்ணெய் விலை அதிகரிக்கும் அபாயமும் எழுந்துள்ளதாகத் தெரிவித்தார்.

எதிர்வரும் ஏப்ரல் 1 ஆம் திகதி முதல் சந்தையில் தேங்காய் எண்ணெய் விலை அதிகரிக்கக்கூடும் என அவர் தெரிவித்தார்.

அந்த நிலைமை காரணமாகப் பாம் எண்ணெய் மற்றும் ஏனைய எண்ணெய் வகைகள் சந்தையில் அதிகமாகப் புழக்கத்திற்கு வரும் அபாயம் உள்ளதாகவும் அவர் எச்சரிக்கை விடுத்தார்.

வைத்தியர்களின் கருத்துப்படி,
அதிக சூட்டில் உணவைப் பொரிப்பதற்குத் தேங்காய் எண்ணெய் மட்டுமே உகந்தது எனவும், பாம் எண்ணெய் மற்றும் ஏனைய எண்ணெய் வகைகளைப் பயன்படுத்துவது சுகாதார அபாயங்களை அதிகரிக்கும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

மேலும், தென்னை சார்ந்த உற்பத்தியை ஏற்றுமதி செய்பவர்கள், உள்ளூர் சந்தைக்குத் தேவையான தேங்காய் எண்ணெய் உற்பத்திக்கான தேங்காயை வெளிநாட்டு ஏற்றுமதிக்குப் பயன்படுத்துவதால், உள்நாட்டுச் சந்தையில் தேங்காய் எண்ணெய் தட்டுப்பாடு ஏற்படும் எனவும், அதன் மூலம் நுகர்வோர் பாம் எண்ணெய் மற்றும் ஏனைய எண்ணெய் வகைகளை நுகர்வதற்குத் தள்ளப்படும் நிலை ஏற்படும் எனவும் ரஞ்சித் விதானகே மேலும் தெரிவித்தார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

மன்னாரில் 2 ஆயிரம் மெட்ரிக் தொன் அளவிலான நெல்லைக் கொள்வனவு செய்ய நடவடிக்கை

மன்னார் மாவட்டத்தில் நெல் சந்தைப்படுத்தல் சபையின் ஊடாக 2 ஆயிரம் மெட்ரிக் தொன் அளவிலான நெல்லைக் கொள்வனவு செய்வதற்கு நடவடிக்கை- மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன்…

56 0 0
இலங்கை செய்திகள்

அரசின் தொலைநோக்கற்ற ஆட்சியால் மக்கள் பேரவலம் – சஜித் குற்றச்சாட்டு

அரசின் தொலைநோக்கற்றஆட்சியால் மக்கள் பேரவலம் தற்போதைய அரசின் தொலைநோக்கற்ற ஆட்சியினால் நாட்டின் மக்கள் பாரிய அவதிக்குள்ளாகியுள்ளனர் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார். பொய்கள் மற்றும்…

55 0 0
இலங்கை செய்திகள்

அக்கரைப்பற்று மண்ணுக்கு பெருமை சேர்த்த மல்யுத்த வீரர்.!

2026ஆம் ஆண்டுக்கான Inter University Wrestling Championship மல்யுத்தப் போட்டியில் 70 கிலோ எடைப்பிரிவில் அக்கரைப்பற்றைச் சேர்ந்த I.F. Angelo முதலாம் Runner-Up இடத்தைப் பெற்று வெள்ளிப்…

56 0 0
இலங்கை செய்திகள்

நீர்கொழும்பை மையமாகக் கொண்டு நடைபெற்ற மூன்று சிறப்பு நிகழ்ச்சிகள்.!

42 ஆவது தேசிய மீலாதுன் நபி அரச பெருவிழாவிற்கு இணையாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிகழ்ச்சித் தொடரின் மூன்றாவது நாளான இன்று (ஆகஸ்ட் 24), நீர்கொழும்பு பிரதேசத்தை மையமாகக்…

44 0 0