உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
24 திங்கள்

மாணவர்கள் பாடசாலையை பாதுகாப்பாக உணரக்கூடிய இடமாக மாற்ற வேண்டும்.!

இலங்கை செய்திகள் 7 மாதங்கள் முன்
19 பார்வைகள்

அவசரநிலை ஏற்பட்டால் மாணவர்களுக்கு உதவுவதற்காக ஆசிரியர்களுக்கான வழிகாட்டுதல்களின் தொகுப்பை வெளியிட தேசிய சிறுவர்கள் பாதுகாப்பு அதிகாரசபை நடவடிக்கை எடுத்துள்ளது.

அதற்கமைய, ஆசிரியர்கள், மாணவர்களுக்காக எவ்வாறான விடயங்களை முன்னெடுக்க வேண்டும்? எவ்வாறான விடயங்களை செய்யக்கூடாது? என இரண்டு பிரிவுகளாக இந்த வழிகாட்டல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

அதன்படி மாணவர்கள், சீருடை, காலணிகள் மற்றும் ஏனைய பாடசாலை உபகரணங்கள் இல்லாமல் பாடசாலைக்கு வருகை தந்தால், அவர்களை வித்தியாசமாக நடத்தக்கூடாது என்றும், மாணவர்கள் கூறுவதை செவிமடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

மாணவர்கள், பாடசாலையை பாதுகாப்பாக உணரக்கூடிய இடமாக மாற்ற வேண்டும். அத்துடன் அவர்களுக்கு எதிர்காலத்திற்கான நம்பிக்கையை வழங்க வேண்டும் என்றும் அந்த வழிகாட்டல்களில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மாணவர்கள், அதிர்ச்சிகரமான சூழ்நிலைகளை மீண்டும் அனுபவிக்கக்கூடாது. பேரிடர்களை எதிர்கொண்ட மாணவர்களை பாரபட்சமான முறையில் நடத்தக்கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆசிரியர்களின் ஓய்வறையிலோ அல்லது பாடசாலையில் உள்ள பிற இடங்களிலோ பேரிடர்களால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் பற்றி விவாதிக்கக்கூடாது.

அதேநேரம் நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை மாணவர்களுக்கு வழங்கக்கூடாது என்றும் தேசிய சிறுவர்கள் பாதுகாப்பு அதிகாரசபை வலியுறுத்தியுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

மன்னாரில் 2 ஆயிரம் மெட்ரிக் தொன் அளவிலான நெல்லைக் கொள்வனவு செய்ய நடவடிக்கை

மன்னார் மாவட்டத்தில் நெல் சந்தைப்படுத்தல் சபையின் ஊடாக 2 ஆயிரம் மெட்ரிக் தொன் அளவிலான நெல்லைக் கொள்வனவு செய்வதற்கு நடவடிக்கை- மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன்…

56 0 0
இலங்கை செய்திகள்

அரசின் தொலைநோக்கற்ற ஆட்சியால் மக்கள் பேரவலம் – சஜித் குற்றச்சாட்டு

அரசின் தொலைநோக்கற்றஆட்சியால் மக்கள் பேரவலம் தற்போதைய அரசின் தொலைநோக்கற்ற ஆட்சியினால் நாட்டின் மக்கள் பாரிய அவதிக்குள்ளாகியுள்ளனர் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார். பொய்கள் மற்றும்…

55 0 0
இலங்கை செய்திகள்

அக்கரைப்பற்று மண்ணுக்கு பெருமை சேர்த்த மல்யுத்த வீரர்.!

2026ஆம் ஆண்டுக்கான Inter University Wrestling Championship மல்யுத்தப் போட்டியில் 70 கிலோ எடைப்பிரிவில் அக்கரைப்பற்றைச் சேர்ந்த I.F. Angelo முதலாம் Runner-Up இடத்தைப் பெற்று வெள்ளிப்…

56 0 0
இலங்கை செய்திகள்

நீர்கொழும்பை மையமாகக் கொண்டு நடைபெற்ற மூன்று சிறப்பு நிகழ்ச்சிகள்.!

42 ஆவது தேசிய மீலாதுன் நபி அரச பெருவிழாவிற்கு இணையாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிகழ்ச்சித் தொடரின் மூன்றாவது நாளான இன்று (ஆகஸ்ட் 24), நீர்கொழும்பு பிரதேசத்தை மையமாகக்…

44 0 0