உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
24 திங்கள்

மகள் குப்பைக்கு மூட்டிய தீயில் சிக்கிய வயோதிபத் தாய் உயிரிழப்பு! யாழில் துயரம்

இலங்கை செய்திகள் 7 மாதங்கள் முன்
21 பார்வைகள்

யாழில் மகள் குப்பைக்கு மூட்டிய தீயில் வயோதிப தாயொருவர் உயிரிழந்த சம்பவம் இன்றையதினம் இடம்பெற்றுள்ளது.அரியாலையை சேர்ந்த 81 வயதுடைய பரமசிவம் பரமேஸ்வரி என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.இது குறித்து மேலும் தெரியவருகையில்,

குறித்த தாய் தனது மகளுடன் வசித்து வந்த நிலையில் கடந்த 17ஆம் திகதி இவரது மகள் வீட்டுக்கு அருகே குப்பைக்கு தீ வைத்துள்ளார்.பின்னர் வீட்டை பூட்டிவிட்டு வெளியே கடைக்கு சென்றுள்ளார். இதன்போது தாயார் வீட்டு அறையில் உறங்கிக்கொண்டு இருந்துள்ளார்.

இதன்போது ஜன்னல் வழியாக தீயானது உள்ளே சென்று கொடியில் இருந்த ஆடைகளில் பற்றி, வீட்டு கூரை மரங்களிலும் பற்றியது. இதன்போது குறித்த வயோதிப பெண் படுக்கையில் இருந்த நிலையில் அவர்மீதும் தீ பற்றியுள்ளது.

அவர் அவலக்குரல் எழுப்பிய நிலையில் அருகில் உள்ள வீட்டில் வசித்த மற்றைய மகள் ஓடிவந்து அவரை காப்பாற்றி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்ப்பித்தார்.இருப்பினும் சிகிச்சை பலனின்றி இன்றையதினம் உயிரிழந்துள்ளார்.அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

மன்னாரில் 2 ஆயிரம் மெட்ரிக் தொன் அளவிலான நெல்லைக் கொள்வனவு செய்ய நடவடிக்கை

மன்னார் மாவட்டத்தில் நெல் சந்தைப்படுத்தல் சபையின் ஊடாக 2 ஆயிரம் மெட்ரிக் தொன் அளவிலான நெல்லைக் கொள்வனவு செய்வதற்கு நடவடிக்கை- மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன்…

0 0 0
இலங்கை செய்திகள்

அரசின் தொலைநோக்கற்ற ஆட்சியால் மக்கள் பேரவலம் – சஜித் குற்றச்சாட்டு

அரசின் தொலைநோக்கற்றஆட்சியால் மக்கள் பேரவலம் தற்போதைய அரசின் தொலைநோக்கற்ற ஆட்சியினால் நாட்டின் மக்கள் பாரிய அவதிக்குள்ளாகியுள்ளனர் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார். பொய்கள் மற்றும்…

55 0 0
இலங்கை செய்திகள்

அக்கரைப்பற்று மண்ணுக்கு பெருமை சேர்த்த மல்யுத்த வீரர்.!

2026ஆம் ஆண்டுக்கான Inter University Wrestling Championship மல்யுத்தப் போட்டியில் 70 கிலோ எடைப்பிரிவில் அக்கரைப்பற்றைச் சேர்ந்த I.F. Angelo முதலாம் Runner-Up இடத்தைப் பெற்று வெள்ளிப்…

56 0 0
இலங்கை செய்திகள்

நீர்கொழும்பை மையமாகக் கொண்டு நடைபெற்ற மூன்று சிறப்பு நிகழ்ச்சிகள்.!

42 ஆவது தேசிய மீலாதுன் நபி அரச பெருவிழாவிற்கு இணையாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிகழ்ச்சித் தொடரின் மூன்றாவது நாளான இன்று (ஆகஸ்ட் 24), நீர்கொழும்பு பிரதேசத்தை மையமாகக்…

44 0 0