உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
24 திங்கள்

வடக்கின் பல பகுதிகளில் இராணுவத்தினர் வசமிருந்த காணிகள் விடுவிப்பு!

இலங்கை செய்திகள் 7 மாதங்கள் முன்
22 பார்வைகள்

மானிப்பாய் பிரதேச சபைக்கு சொந்தமான பண்டத்தரிப்பில் உள்ள காணியில் நிலை கொண்டிருந்த இராணுவத்தினர் அக்காணியில் இருந்து நேற்றைய தினம் முற்றாக வெளியேறியுள்ளனர்.காணியில் இருந்து வெளியேறிய இராணுவத்தினர் காணியை சண்டிலிப்பாய் பிரதேச செயலரிடம் கையளித்த நிலையில் , பிரதேச செயலர் குமாரசாமி பிரபாகரமூர்த்தி , காணியை மானிப்பாய் பிரதேச சபை தவிசாளர் கந்தையா ஜெசிதனிடம் உத்தியோக பூர்வமாக கையளித்துள்ளார்.

மானிப்பாய் பிரதேச சபைக்கு சொந்தமான 31 பரப்புடைய காணியை யுத்தம் நிறைவுக்கு வந்த பின்னர் கடந்த 2012ஆம் ஆண்டளவில் இராணுவத்தினர் கையகப்படுத்தி இராணுவ முகாம் அமைத்திருந்தனர்.

குறித்த காணிக்குள் மானிப்பாய் பிரதேச சபைக்கு சொந்தமான “கொல்களம்” இருந்த நிலையில் , அதுவும் இராணுவத்தினரின் பிடிக்குள் இருந்ததால் , தெல்லிப்பழை பகுதியில் வாடகை இடமொன்றில் கொல்களம் இயங்கி வந்தமை குறிப்பிடத்தக்கது.இதேவேளை, காணி பிரதேச சபைக்கு மீள கிடைத்த நிலையில் , அது தொடர்பில் தவிசாளர் தெரிவிக்கையில்,

குறித்த காணியில் சபைக்கு வருமானத்தை ஈட்ட கூடிய வகையில் மிக சிறந்த பொருளாதார திட்டங்களை மேற்கொள்ள நடவடிக்கைகள் எடுக்கப்படும்.காணிக்குள் முன்னர் கொல்களம் இயங்கி வந்தது.அதனை மீள அவ்விடத்தில் இயக்குவது தொடர்பில் அப்பிரதேச மக்கள் மற்றும் அப்பகுதி வட்டார உறுப்பினர்களின் கருத்துக்கள் கேட்கப்பட்டு , அது தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.அதேவேளை கடந்த வாரம் சுழிபுரம் பகுதியில் இருந்த மினி இராணுவ முகாம் ஒன்றும் அகற்றப்பட்டு , அக்காணிகள் காணி உரிமையாளர்களிடம் மீள கையளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

மன்னாரில் 2 ஆயிரம் மெட்ரிக் தொன் அளவிலான நெல்லைக் கொள்வனவு செய்ய நடவடிக்கை

மன்னார் மாவட்டத்தில் நெல் சந்தைப்படுத்தல் சபையின் ஊடாக 2 ஆயிரம் மெட்ரிக் தொன் அளவிலான நெல்லைக் கொள்வனவு செய்வதற்கு நடவடிக்கை- மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன்…

1 0 0
இலங்கை செய்திகள்

அரசின் தொலைநோக்கற்ற ஆட்சியால் மக்கள் பேரவலம் – சஜித் குற்றச்சாட்டு

அரசின் தொலைநோக்கற்றஆட்சியால் மக்கள் பேரவலம் தற்போதைய அரசின் தொலைநோக்கற்ற ஆட்சியினால் நாட்டின் மக்கள் பாரிய அவதிக்குள்ளாகியுள்ளனர் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார். பொய்கள் மற்றும்…

55 0 0
இலங்கை செய்திகள்

அக்கரைப்பற்று மண்ணுக்கு பெருமை சேர்த்த மல்யுத்த வீரர்.!

2026ஆம் ஆண்டுக்கான Inter University Wrestling Championship மல்யுத்தப் போட்டியில் 70 கிலோ எடைப்பிரிவில் அக்கரைப்பற்றைச் சேர்ந்த I.F. Angelo முதலாம் Runner-Up இடத்தைப் பெற்று வெள்ளிப்…

56 0 0
இலங்கை செய்திகள்

நீர்கொழும்பை மையமாகக் கொண்டு நடைபெற்ற மூன்று சிறப்பு நிகழ்ச்சிகள்.!

42 ஆவது தேசிய மீலாதுன் நபி அரச பெருவிழாவிற்கு இணையாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிகழ்ச்சித் தொடரின் மூன்றாவது நாளான இன்று (ஆகஸ்ட் 24), நீர்கொழும்பு பிரதேசத்தை மையமாகக்…

44 0 0