மாமுனை சந்தியில் வேகக்கட்டுப்பாட்டை இழந்த வாகனம் விபத்து..!
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு மாமுனை சந்தி பகுதியில் இன்று பிற்பகல் 4.30 மணியளவில் வாகன விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளது.சம்பவம் தொடர்பில் மேலதிகமாக தெரியவருவதாவது, பருத்தித்துறையிலிருந்து மருதங்கேணி நோக்கிப் பயணித்த இரண்டு வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதியதையடுத்து, மாமுனை சந்தி பகுதியில் வேகக் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
விபத்து ஏற்பட்டபோது, வாகனங்களில் பயணித்தவர்களுக்கு எவ்விதக் காயங்களும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற மருதங்கேணி போக்குவரத்து பொலிஸார் விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதனிடையே குறித்த விபத்து இடம்பெற்ற பகுதியில் உரிய வீதி குறியீடுகள் இல்லாததே இப்பகுதியில் அடிக்கடி விபத்துகள் இடம்பெறுவதற்கான முக்கிய காரணமாக உள்ளதாக அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
