பொகவந்தலாவ சென்மேரிஸ் கனிஷ்ட வித்தியாலயத்தில் நடைபெற்ற கால்கோள் விழா.!
தரம் 1 மாணவர்களின் கால்கோள் விழா இன்று (29) வியாழக்கிழமை பொகவந்தலாவ சென்மேரிஸ் கனிஷ்ட வித்தியாலயத்தில் அதிபர் மார்சல் ராஜநாயகம் தலைமையில் இடம்பெற்றது.
இந் நிகழ்வில் ஹட்டன் வலய கோட்டக் கல்விப் பணிப்பாளர் எம்.செந்தூர்வேல் கலந்து கொண்டார்.
இதில் சிறப்பம்சமாக பெற்றோர்களின் பங்களிப்புடன் பாடசாலை மேம்பாட்டுக் குழுவினால் வடிவமைக்கப்பட்ட பாடசாலை மண்டப நுழைவாயிலுக்கான கூரையிடல் வேலைத்திட்டம் நிறைவு செய்யப்பட்டு உத்தியோக பூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.



