உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
24 திங்கள்

புதிய மிருக வைத்தியசாலை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு.!

இலங்கை செய்திகள் 7 மாதங்கள் முன்
27 பார்வைகள்

நான்கு கோடி ரூபாய் செலவில் மஸ்கெலியா நகரில் புதிய மிருக வைத்தியசாலை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.

இன்று காலை 10 மணிக்கு மஸ்கெலியா நகரில் ஆலய வீதியில் முன்னைய மிருக வைத்தியசாலைக்கு அருகில் சகல வளங்களும் கொண்ட மிருக வைத்திய சாலைக்கு மஸ்கெலியா மிருக வைத்திய சாலையின் மிருக வைத்திய அதிகாரி தலைமையில் அடிக்கல் நாட்டும் நிகழ்வு நடைபெற்றது.

இவ் வைபவத்தில் மத்திய மாகாண மிருக வைத்திய அத்தியட்சகர், மத்திய மாகாண மிருக வைத்திய உதவி அத்தியட்சகர், நாவலப்பிட்டி பகுதிக்கு பொறுப்பான மிருக வைத்திய அதிகாரி, ஹட்டன் பகுதிக்கு பொறுப்பான மிருக வைத்திய அதிகாரி, பொகவந்தலாவ பகுதிக்கு பொறுப்பான மிருக வைத்திய அதிகாரி, நுவரெலியா மாவட்ட மிருக வைத்திய அத்தியட்சகர் அடங்கலாக மஸ்கெலியா பிரதேச சபையின் தவிசாளர் கந்தையா இராஜ்குமார் மற்றும் மஸ்கெலியா பிரதேச சபையின் உறுப்பினர்கள், செயலாளர் மஸ்கெலியா மிருக வைத்தியசாலையில் உள்ள ஏனைய அதிகாரிகள், மஸ்கெலியா பகுதியில் உள்ள பண்ணையாளர்கள் கலந்து கொண்டனர்.

நிகழ்வில் மஸ்கெலியா சுமாரான விகாரையில் உள்ள பௌத்த மதகுரு அவர்களின் சமய கிரியைகளை தொடர்ந்து சுப வேளையில் அடிக்கல் நாட்டப்பட்டது.

அதனைத் தொடர்ந்து அங்கு உரையாற்றிய மத்திய மாகாண மிருக வைத்திய அத்தியட்சகர் 1968 ஆம் ஆண்டு காலப் பகுதியில் கட்டப்பட்ட வைத்தியசாலை முழுமை பெறாத நிலையில் இருந்தது. அதன் காரணமாக இவ் வைத்தியசாலையில் அடிக்கடி வைத்தியர்கள் மாற்றம் பெற்று சென்றனர் காரணம் தங்குமிடம் இல்லை.

இன்றைய அரசு நான்கு கோடி ரூபாய் செலவில் மிருக வைத்தியசாலைக்கு உரித்தான இடத்தில் நவீன முறையில் மிருக வைத்தியசாலை வைத்தியர்கள் தங்குமிடம் மற்றும் ஏனைய முழுமைப்படுத்தப்பட்ட மிருக வைத்தியசாலை ஒன்றை அமைக்க முன்வந்துள்ளது.

இந்த கட்டிடம் இன்னும் ஒரு வருடத்தில் கட்டப்பட்டு இப் பகுதியில் உள்ள அனைத்து பண்ணையாளர்களும் பயன் பெற மக்கள் பாவனைக்கு விடப்படவுள்ளது என்றார்.

இந்த நிகழ்வில் மஸ்கெலியா பிரதேச சபையின் தவிசாளர் கந்தையா இராஜ்குமார் மற்றும் உறுப்பினர்கள் உரையாற்றினார்கள்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

அரசின் தொலைநோக்கற்ற ஆட்சியால் மக்கள் பேரவலம் – சஜித் குற்றச்சாட்டு

அரசின் தொலைநோக்கற்றஆட்சியால் மக்கள் பேரவலம் தற்போதைய அரசின் தொலைநோக்கற்ற ஆட்சியினால் நாட்டின் மக்கள் பாரிய அவதிக்குள்ளாகியுள்ளனர் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார். பொய்கள் மற்றும்…

53 0 0
இலங்கை செய்திகள்

அக்கரைப்பற்று மண்ணுக்கு பெருமை சேர்த்த மல்யுத்த வீரர்.!

2026ஆம் ஆண்டுக்கான Inter University Wrestling Championship மல்யுத்தப் போட்டியில் 70 கிலோ எடைப்பிரிவில் அக்கரைப்பற்றைச் சேர்ந்த I.F. Angelo முதலாம் Runner-Up இடத்தைப் பெற்று வெள்ளிப்…

55 0 0
இலங்கை செய்திகள்

நீர்கொழும்பை மையமாகக் கொண்டு நடைபெற்ற மூன்று சிறப்பு நிகழ்ச்சிகள்.!

42 ஆவது தேசிய மீலாதுன் நபி அரச பெருவிழாவிற்கு இணையாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிகழ்ச்சித் தொடரின் மூன்றாவது நாளான இன்று (ஆகஸ்ட் 24), நீர்கொழும்பு பிரதேசத்தை மையமாகக்…

44 0 0
இலங்கை செய்திகள்

புதுப்பிக்கத்தக்க எரிசக்தி கட்டணங்கள் மற்றும் புதிய விதிமுறைகள் தொடர்பில் ஊடகவியலாளர் சந்திப்பு.!

கொழும்பிலுள்ள இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் (PUCSL) தலைமையகத்தில் புதுப்பிக்கத்தக்க மின்சார சக்திக்கான கட்டணங்கள் மற்றும் புதிய ஒழுங்குமுறைகள் தொடர்பில் விசேட ஊடகவியலாளர் சந்திப்பொன்று இன்றையதினம் (24)…

61 0 0