உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
24 திங்கள்

பொதுமக்களின் பிரச்சினைகள் தாமதமின்றி தீர்த்து வைக்கப்படும்.!

இலங்கை செய்திகள் 7 மாதங்கள் முன்
20 பார்வைகள்

மஸ்கெலியா பிரதேச சபையின் ஊடாக போது மக்களின் பிரச்சினைகள் மற்றும் தேவைகள் கால தாமதமின்றி நிறைவேற்றிக் கொடுக்கப்படும் என மஸ்கெலியா பிரதேச சபைத் தலைவர் கே. ராஜ்குமார் தெரிவித்தார்.

பிரதேச சபையின் நவீன மயப்படுத்தப்பட்ட புதிய அலுவலகம் சம்பந்தமாக (28) நேற்று கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்,
மிகவும் வசதி குறைந்த நிலையில் காணப்பட்ட பிரதேச சபைத் தலைவரின் அலுவலகம் பொது மக்கள் தாராளமாக அமர்ந்து சந்தித்துக் கதைக்கக் கூடிய வகையில் வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது. இந்த அலுவலகத்தை சாதாரண ஒரு பெண் தொழிலாளி ஒருவரைக் கொண்டு திறந்து வைத்துள்ளோம். மேலும் தேவை கருதி இங்கு வருகை தரும் மக்களுக்கு தேநீர் உபசாரம் வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அத்தோடு அவர்களின் தேவைகள் கால தாமதமின்றி உடனுக்குடன் நிறைவேற்றிக் கொடுக்குமாறு உத்தியோகத்தர்களுக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது. மறைப்பது இருந்தால் எனது கவனத்துக்குக் கொண்டு வரலாம்.

எமது பிரதேச சபையின் 10 வட்டாரங்களைச் சேர்ந்த 17 உறுப்பினர்களுக்கும் 2025 வரவு செலவுத் திட்டத்தில் தலா ஒரு இலட்ச ரூபா நிதி ஒதுக்கப்பட்டிருந்தது. அந்தத் தொகை 2026 இல் ஒவ்வொரு உறுப்பினருக்கும் 3½ இலட்சமாக அதிகரிக்கப்படவுள்ளதால், தமது வட்டாரங்களில் கூடுதலான அபிவிருத்திப் பணிகளை மேற்கொள்ளக் கூடியதாக இருக்கும். மேலும், இந்த ஆண்டில் முதன் முறையாக முன்பள்ளி அபிவிருத்திக்கு பிரதேச சபையின் ஊடாக பாரிய நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு ஜனவரி மாதத்தோடு ஒப்பிட்டுப் பார்க்கும் போது இம்முறை சிவனொளிபாதமலைக்கு வருகை தரும் யாத்திரிகர்களின் எண்ணிக்கையில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. யாத்திரிகர்களின் நலன் கருதி, வாகனத் தரிப்பிடம், குடிநீர், மலசலகூட வசதிகள் உட்பட தற்காலிகக் கடைகள் பல திறக்கப்பட்டுள்ள போதிலும் வார இறுதி நாட்களைத் தவிர ஏனைய நாட்களில் யாத்திரிகர்கள் மிகவும் குறைவாகவே வந்து போகின்றார்கள்.

கடந்த ஆண்டு இறுதியில் ஏற்பட்ட மழை வெள்ளம், புயல் மற்றும் மண்சரிவு காரணமாக ஏற்பட்ட போக்குவரத்துத் தடைகளும் புகையிரத சேவை இடம்பெறாமல் உள்ளமையும் பிரதான காரணங்களாகும். எனினும், அடுத்த மாதத்திலிருந்து யாத்திரிகர் வருகையில் முனேற்றம் ஏற்படுமென்று எதிர்பார்க்கப்படுகின்றது. அவர்களுக்குத் தேவையான வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க பிரதேச சபை தயாராக இருக்கின்றது. இலங்கை போக்குவரத்துச் சபை நல்லதண்ணீர் – ட்டன் புகையிரத இணைப்பு பஸ் சேவையை வழங்கும். தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை நல்லதண்ணீர் பொலிஸ் நிலையம் மேற்கொள்ளும் என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

அரசின் தொலைநோக்கற்ற ஆட்சியால் மக்கள் பேரவலம் – சஜித் குற்றச்சாட்டு

அரசின் தொலைநோக்கற்றஆட்சியால் மக்கள் பேரவலம் தற்போதைய அரசின் தொலைநோக்கற்ற ஆட்சியினால் நாட்டின் மக்கள் பாரிய அவதிக்குள்ளாகியுள்ளனர் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார். பொய்கள் மற்றும்…

48 0 0
இலங்கை செய்திகள்

அக்கரைப்பற்று மண்ணுக்கு பெருமை சேர்த்த மல்யுத்த வீரர்.!

2026ஆம் ஆண்டுக்கான Inter University Wrestling Championship மல்யுத்தப் போட்டியில் 70 கிலோ எடைப்பிரிவில் அக்கரைப்பற்றைச் சேர்ந்த I.F. Angelo முதலாம் Runner-Up இடத்தைப் பெற்று வெள்ளிப்…

53 0 0
இலங்கை செய்திகள்

நீர்கொழும்பை மையமாகக் கொண்டு நடைபெற்ற மூன்று சிறப்பு நிகழ்ச்சிகள்.!

42 ஆவது தேசிய மீலாதுன் நபி அரச பெருவிழாவிற்கு இணையாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிகழ்ச்சித் தொடரின் மூன்றாவது நாளான இன்று (ஆகஸ்ட் 24), நீர்கொழும்பு பிரதேசத்தை மையமாகக்…

43 0 0
இலங்கை செய்திகள்

புதுப்பிக்கத்தக்க எரிசக்தி கட்டணங்கள் மற்றும் புதிய விதிமுறைகள் தொடர்பில் ஊடகவியலாளர் சந்திப்பு.!

கொழும்பிலுள்ள இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் (PUCSL) தலைமையகத்தில் புதுப்பிக்கத்தக்க மின்சார சக்திக்கான கட்டணங்கள் மற்றும் புதிய ஒழுங்குமுறைகள் தொடர்பில் விசேட ஊடகவியலாளர் சந்திப்பொன்று இன்றையதினம் (24)…

60 0 0