உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
24 திங்கள்

சிறுவர்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்த கட்டுப்பாடு விதிப்பது தொடர்பில் பரிசீலனை.!

இலங்கை செய்திகள் 7 மாதங்கள் முன்
21 பார்வைகள்

12 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்த கட்டுப்பாடு விதிப்பது தொடர்பில் அரசாங்கம் பரிசீலனை செய்து வருவதாக மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சாவித்திரி போல்ராஜ் தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பில் கலந்துரையாடல்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

12 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் கையடக்க தொலைபேசி பயன்படுத்துவதை முழுமையாக தடை செய்ய அரசாங்கம் முன்மொழிந்துள்ளதாகவும், சமூக ஊடக தளங்களை அணுகுவதை தடை செய்வதற்கான நடவடிக்கைகளையும் அரசாங்கம் முன்மொழிந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

உலகம் முழுவதும் பல நாடுகள் ஏற்கனவே பாடசாலை மாணவர்களிடையே சமூக ஊடக பயன்பாட்டை கட்டுப்படுத்தும் சட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளன எனவும், இலங்கையும் அத்தகைய மாதிரிகளை ஆராய்ந்து வருவதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சிறுவர்கள் இணையத்தை பயன்படுத்தும் போது ஒழுக்க ரீதியாக தீங்கு விளைவிக்கும் மற்றும் துஷ்பிரயோகம் செய்யும் சம்பவங்கள் அதிகரித்து வருவதால் அதனை கட்டுப்படுத்த வேண்டிய தேவை எழுந்துள்ளது.

இந்நிலையில், சிறுவர்களுக்கு எதிரான சைபர் குற்றங்களை குறைக்க அரசாங்கம் புதிய சட்டத்தை அறிமுகப்படுத்த தீர்மானம் செய்துள்ளது, இதற்கு ஏற்கனவே அமைச்சரவையும் அங்கீகாரம் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

அரசின் தொலைநோக்கற்ற ஆட்சியால் மக்கள் பேரவலம் – சஜித் குற்றச்சாட்டு

அரசின் தொலைநோக்கற்றஆட்சியால் மக்கள் பேரவலம் தற்போதைய அரசின் தொலைநோக்கற்ற ஆட்சியினால் நாட்டின் மக்கள் பாரிய அவதிக்குள்ளாகியுள்ளனர் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார். பொய்கள் மற்றும்…

48 0 0
இலங்கை செய்திகள்

அக்கரைப்பற்று மண்ணுக்கு பெருமை சேர்த்த மல்யுத்த வீரர்.!

2026ஆம் ஆண்டுக்கான Inter University Wrestling Championship மல்யுத்தப் போட்டியில் 70 கிலோ எடைப்பிரிவில் அக்கரைப்பற்றைச் சேர்ந்த I.F. Angelo முதலாம் Runner-Up இடத்தைப் பெற்று வெள்ளிப்…

53 0 0
இலங்கை செய்திகள்

நீர்கொழும்பை மையமாகக் கொண்டு நடைபெற்ற மூன்று சிறப்பு நிகழ்ச்சிகள்.!

42 ஆவது தேசிய மீலாதுன் நபி அரச பெருவிழாவிற்கு இணையாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிகழ்ச்சித் தொடரின் மூன்றாவது நாளான இன்று (ஆகஸ்ட் 24), நீர்கொழும்பு பிரதேசத்தை மையமாகக்…

42 0 0
இலங்கை செய்திகள்

புதுப்பிக்கத்தக்க எரிசக்தி கட்டணங்கள் மற்றும் புதிய விதிமுறைகள் தொடர்பில் ஊடகவியலாளர் சந்திப்பு.!

கொழும்பிலுள்ள இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் (PUCSL) தலைமையகத்தில் புதுப்பிக்கத்தக்க மின்சார சக்திக்கான கட்டணங்கள் மற்றும் புதிய ஒழுங்குமுறைகள் தொடர்பில் விசேட ஊடகவியலாளர் சந்திப்பொன்று இன்றையதினம் (24)…

60 0 0