உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
24 திங்கள்

“எல்லா பிள்ளைகளுக்கும் சமமான கல்வி உரிமை வழங்கப்பட வேண்டும் – பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய.!

இலங்கை செய்திகள் 7 மாதங்கள் முன்
21 பார்வைகள்

எந்தவொரு பிள்ளையினதும் கல்வி அவர்களது பெற்றோரின் பொருளாதார நிலையைப் பொறுத்து தீர்மானிக்கப்படக் கூடாது என்பதும், எந்தவொரு பிள்ளையும் கல்வியிலிருந்து புறக்கணிக்கப்படக் கூடாது என்பதுமே அரசாங்கத்தின் நம்பிக்கை என பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

புதிய கல்விச் சீர்திருத்தங்களின் கீழ் முதலாம் தரத்திற்கு நுழையும் அனைத்துப் பிள்ளைகளுக்கும், கல்வி அமைச்சர் என்ற ரீதியில் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியிலேயே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

ஒவ்வொரு பிள்ளையினதும் சமமான கல்வி உரிமையை உறுதிப்படுத்துவதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் அரசாங்கம் என்ற ரீதியில் முன்னெடுக்கும் பொறுப்பை ஏற்றுள்ளதாக அவர் கூறியுள்ளார். மேலும், இந்த நேர்மையான முயற்சியை வெற்றிகரமாக முன்னெடுக்க அனைவரதும் ஆக்கபூர்வமான கருத்துக்களை மிகவும் முக்கியமாகக் கருதுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பாடசாலை செல்லும் முதல் நாள் எமது அன்புக்குரிய பிள்ளைகளின் வாழ்க்கையில் பசுமையானதொரு நினைவாக அமைய வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பாகும்.

அந்த நோக்கத்தை நனவாக்கும் வகையில், பாடசாலைப் பருவத்தை மகிழ்ச்சியாகவும் உற்சாகமாகவும் அர்த்தமுள்ள விதத்திலும் சுதந்திரமாகக் கழிப்பதற்கு ஏற்றவாறு பாடசாலைச் சூழலையும், கற்றல் – கற்பித்தல் செயல்முறையையும் மிகவும் வினைத்திறன் மிக்கதாக மாற்றுவதற்கு நாம் பெரும் முயற்சி எடுத்து வருகின்றோம்.

நீங்கள் சுமந்து வரும் புத்தகப் பையின் சுமையைக் குறைக்க நாம் முயற்சிப்பது, நீங்கள் பெற்றுக்கொள்ள வேண்டிய அறிவு, மனப்பாங்கு மற்றும் திறன்களில் எவ்விதக் குறைபாடும் ஏற்படாத வகையில், எதிர்கால உலகிற்குப் பொருத்தமானவர்களாக உங்களை ஒரு முழுமையான பிரஜையாக உருவாக்குவதற்காகவே ஆகும்.

அன்புக்குரிய பெற்றோர்களே, ஒரு வளமான நாட்டில் உங்கள் பிள்ளைக்கு ஒரு வளமான கல்வியைப் பெற்றுக்கொடுப்பதே எமது நோக்கமாகும். எந்தவொரு பிள்ளையினதும் கல்வி, அவர்களின் பெற்றோரின் பொருளாதார நிலையைக் கொண்டு தீர்மானிக்கப்படக் கூடாது என்பதும், எந்தவொரு பிள்ளையும் கல்வியிலிருந்து புறக்கணிக்கப்படக் கூடாது என்பதே எமது எதிர்பார்ப்பாகும்.

அதற்கமைய, ஒவ்வொரு பிள்ளைக்கும் சமமான கல்வி உரிமையை உறுதிப்படுத்துவதற்குத் தேவையான சகல நடவடிக்கைகளையும் ஓர் அரசாங்கம் என்ற ரீதியில் முன்னெடுக்க வேண்டிய பொறுப்பை நாம் ஏற்றுள்ளோம்.

எமது இந்த நேர்மையான முயற்சியை வெற்றிகொள்வதற்கு உங்கள் அனைவரதும் ஆக்கபூர்வமான கருத்துக்கள் மிகவும் முக்கியமானவை என நாம் கருதுகிறோம்.

நெகிழ்வுத்தன்மை மிக்க சிநேகபூர்வமான அணுகுமுறையுடன் அந்த நேர்மறையான வழிகாட்டல்களையும் கருத்துகளையும் ஏற்றுக்கொண்டு, ஓடி ஆடி விளையாடியவாறு வளரும் உங்கள் பிள்ளைகளின் அனுபவங்களைச் செயல்திறன் மிக்க, அர்த்தமுள்ளவையாக மாற்றி, அவர்களை வகுப்பறையில் மகிழ்ச்சியுடன் வைத்திருக்கும் பொறுப்பை நாம் ஏற்றுள்ளோம்.

அன்புக்குரிய பிள்ளைகளே, தாயின் மடியிலிருந்து விலகி, ஆசிரியர் எனும் பெற்றோரின் அரவணைப்புக்குள் வரும் உங்கள் அனைவரதும் எதிர்காலம் எல்லா விதத்திலும் வெற்றிபெற வேண்டுமென மனதார வாழ்த்துகிறேன்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

அக்கரைப்பற்று மண்ணுக்கு பெருமை சேர்த்த மல்யுத்த வீரர்.!

2026ஆம் ஆண்டுக்கான Inter University Wrestling Championship மல்யுத்தப் போட்டியில் 70 கிலோ எடைப்பிரிவில் அக்கரைப்பற்றைச் சேர்ந்த I.F. Angelo முதலாம் Runner-Up இடத்தைப் பெற்று வெள்ளிப்…

50 0 0
இலங்கை செய்திகள்

நீர்கொழும்பை மையமாகக் கொண்டு நடைபெற்ற மூன்று சிறப்பு நிகழ்ச்சிகள்.!

42 ஆவது தேசிய மீலாதுன் நபி அரச பெருவிழாவிற்கு இணையாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிகழ்ச்சித் தொடரின் மூன்றாவது நாளான இன்று (ஆகஸ்ட் 24), நீர்கொழும்பு பிரதேசத்தை மையமாகக்…

39 0 0
இலங்கை செய்திகள்

புதுப்பிக்கத்தக்க எரிசக்தி கட்டணங்கள் மற்றும் புதிய விதிமுறைகள் தொடர்பில் ஊடகவியலாளர் சந்திப்பு.!

கொழும்பிலுள்ள இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் (PUCSL) தலைமையகத்தில் புதுப்பிக்கத்தக்க மின்சார சக்திக்கான கட்டணங்கள் மற்றும் புதிய ஒழுங்குமுறைகள் தொடர்பில் விசேட ஊடகவியலாளர் சந்திப்பொன்று இன்றையதினம் (24)…

57 0 0
இலங்கை செய்திகள்

யாழ். வலிகாமம் தெற்கு பிரதேச சபையின் புதிய உள்ளக விளையாட்டு அரங்குக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு.!

யாழ்ப்பாணம் – வலிகாமம் தெற்கு பிரதேச சபையின் புதிய உள்ளக விளையாட்டு அரங்குக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று காலை, பிரதேச சபையின் தலைமை அலுவலக வளாகத்தில்…

41 0 0