உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
24 திங்கள்

தாக்குதல் குற்றச்சாட்டு களுத்துறை மாநகர சபை உறுப்பினர் கைது.!

இலங்கை செய்திகள் 7 மாதங்கள் முன்
24 பார்வைகள்

முன்னாள் அமைச்சர் அஜித் பி. பெரேரா தலைமையில் இன்று பிற்பகல் களுத்துறை நகரில் ஐக்கிய மக்கள் சக்தியின் செயற்பாட்டாளர்களால் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தின் போது, நபர் ஒருவரைத் தாக்கிய குற்றச்சாட்டில் களுத்துறை மாநகர சபை உறுப்பினர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

களுத்துறை மாநகர சபை உறுப்பினர் ஜெயநாத் நவரத்ன என்பவரே களுத்துறை தெற்கு தலைமையக பொலிஸாரால் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.வீதியில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த நபர் ஒருவர், போராட்ட இடத்திற்கு அருகில் தனது வாகனத்தை நிறுத்தி, “சோறு உண்ணும் மாடுகள் இன்னும் இருக்கின்றனவா? என கூறியுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த குறித்த மாநகர சபை உறுப்பினர் அவர் மீது தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படுகிறது.வாதுவ, பொத்துபிட்டிய பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவரே இவ்வாறு தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார்.தாக்குதலின் பின்னர் அவர் களுத்துறை தெற்கு பொலிஸ் நிலையத்திற்குச் சென்று முறைப்பாடு செய்துள்ளார்.

இதேவேளை, குறித்த நபர் தமது அமைதியான போராட்டத்திற்கு இடையூறு விளைவித்ததாகத் தெரிவித்து அந்த மாநகர சபை உறுப்பினரும் முறைப்பாடு செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.எவ்வாறாயினும், தாக்குதலுக்கு உள்ளானவர் கைது செய்யப்பட்டதன் பின்னர் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது குறித்து முன்னாள் அமைச்சர் அஜித் பி. பெரேராவிடம் கேட்டபோது, இவ்வாறான சம்பவம் ஒன்று பதிவாகியுள்ள போதிலும், தான் அந்த நேரத்தில் அங்கு இருக்கவில்லை எனத் தெரிவித்தார்.களுத்துறை தெற்கு தலைமையக பொலிஸார் இச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

அக்கரைப்பற்று மண்ணுக்கு பெருமை சேர்த்த மல்யுத்த வீரர்.!

2026ஆம் ஆண்டுக்கான Inter University Wrestling Championship மல்யுத்தப் போட்டியில் 70 கிலோ எடைப்பிரிவில் அக்கரைப்பற்றைச் சேர்ந்த I.F. Angelo முதலாம் Runner-Up இடத்தைப் பெற்று வெள்ளிப்…

50 0 0
இலங்கை செய்திகள்

நீர்கொழும்பை மையமாகக் கொண்டு நடைபெற்ற மூன்று சிறப்பு நிகழ்ச்சிகள்.!

42 ஆவது தேசிய மீலாதுன் நபி அரச பெருவிழாவிற்கு இணையாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிகழ்ச்சித் தொடரின் மூன்றாவது நாளான இன்று (ஆகஸ்ட் 24), நீர்கொழும்பு பிரதேசத்தை மையமாகக்…

39 0 0
இலங்கை செய்திகள்

புதுப்பிக்கத்தக்க எரிசக்தி கட்டணங்கள் மற்றும் புதிய விதிமுறைகள் தொடர்பில் ஊடகவியலாளர் சந்திப்பு.!

கொழும்பிலுள்ள இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் (PUCSL) தலைமையகத்தில் புதுப்பிக்கத்தக்க மின்சார சக்திக்கான கட்டணங்கள் மற்றும் புதிய ஒழுங்குமுறைகள் தொடர்பில் விசேட ஊடகவியலாளர் சந்திப்பொன்று இன்றையதினம் (24)…

57 0 0
இலங்கை செய்திகள்

யாழ். வலிகாமம் தெற்கு பிரதேச சபையின் புதிய உள்ளக விளையாட்டு அரங்குக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு.!

யாழ்ப்பாணம் – வலிகாமம் தெற்கு பிரதேச சபையின் புதிய உள்ளக விளையாட்டு அரங்குக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று காலை, பிரதேச சபையின் தலைமை அலுவலக வளாகத்தில்…

41 0 0