உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
24 திங்கள்

யாழில் 28 வருடங்களுக்கு பின் மீண்டும் இயங்கவுள்ள பொது சந்தை.!

இலங்கை செய்திகள் 7 மாதங்கள் முன்
23 பார்வைகள்

யாழ்ப்பாணம் – காங்கேசன்துறை பொது சந்தை 28 வருடங்களுக்கு பின்னர் மீண்டும் இயங்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. .பல தீர்மானங்களின் பின்னர் ஆரம்பிக்கப்பட்டவுள்ளதாக கூறப்பட்ட வேளையில், இன்று(28.01.2026) முதல் இயங்க ஆரம்பித்துள்ளது.உள்நாட்டு யுத்தம் காரணமாக 1990ஆம் ஆண்டு கால பகுதியில் காங்கேசன்துறை பகுதியில் இருந்து மக்கள் வெளியேறிய நிலையில், சுமார் 28 வருடங்களுக்கு மேலாக அந்த பகுதியில் மக்கள் மீள் குடியேற அனுமதிக்காது உயர் பாதுகாப்பு வலயமாக குறித்த பிரதேசம் பிரகடனப்படுத்தப்பட்டிருந்தது.

பின்னரான கால பகுதியில் மக்கள் மீள் குடியேற அனுமதிக்கப்பட்ட நிலையில், வலி. வடக்கு பிரதேச சபையின் ஆளுகைக்கு உட்பட்ட காங்கேசன்துறை பொது சந்தையை மீள சொந்த இடத்தில் இயங்க வைப்பதற்கான கட்டடங்கள் கட்டப்பட்டது.அப்போது சந்தை ஆரம்பிக்கப்பட்ட போதிலும், மக்கள் மரக்கறிகளை கொள்வனவு செய்ய வருகை தருவது குறைவாக இருந்தமையால், வியாபாரிகள் மரக்கறி விற்பனையை கைவிட்ட நிலையில் , சந்தை கட்டடமும் மூடப்பட்டது.இந்நிலையில், வலி. வடக்கு பிரதேச சபை மீள தெரிவான நிலையில், சந்தையை இந்த வருடம் ஜனவரி மாதம் முதல் சொந்த இடத்தில் இயங்க செய்வது எனவும், சந்தையை சூழவுள்ள பகுதிகளில் வீதியோர மரக்கறி விற்பனை, கடைகளில் மரக்கறி விற்பனையை இடைநிறுத்தி, சந்தையில் மாத்திரம் மரக்கறி விற்பனை மேற்கொள்ள வேண்டும் என தீர்மானம் எடுக்கப்பட்டது.

அத்துடன், சந்தை கட்டடத்தில் வியாபாரிகளுக்கான இட ஒதுக்கீடுகளையும் விரைந்து ஏற்படுத்தி கொடுக்கப்படும் என்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.இதன்படி, விரைவில் சந்தை வியாபார நடவடிக்கைகள் உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில், சந்தையில் வியாபாரத்திற்கு இடம்பெற்ற ஒருவர் இன்று வியாபார நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

அக்கரைப்பற்று மண்ணுக்கு பெருமை சேர்த்த மல்யுத்த வீரர்.!

2026ஆம் ஆண்டுக்கான Inter University Wrestling Championship மல்யுத்தப் போட்டியில் 70 கிலோ எடைப்பிரிவில் அக்கரைப்பற்றைச் சேர்ந்த I.F. Angelo முதலாம் Runner-Up இடத்தைப் பெற்று வெள்ளிப்…

50 0 0
இலங்கை செய்திகள்

நீர்கொழும்பை மையமாகக் கொண்டு நடைபெற்ற மூன்று சிறப்பு நிகழ்ச்சிகள்.!

42 ஆவது தேசிய மீலாதுன் நபி அரச பெருவிழாவிற்கு இணையாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிகழ்ச்சித் தொடரின் மூன்றாவது நாளான இன்று (ஆகஸ்ட் 24), நீர்கொழும்பு பிரதேசத்தை மையமாகக்…

39 0 0
இலங்கை செய்திகள்

புதுப்பிக்கத்தக்க எரிசக்தி கட்டணங்கள் மற்றும் புதிய விதிமுறைகள் தொடர்பில் ஊடகவியலாளர் சந்திப்பு.!

கொழும்பிலுள்ள இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் (PUCSL) தலைமையகத்தில் புதுப்பிக்கத்தக்க மின்சார சக்திக்கான கட்டணங்கள் மற்றும் புதிய ஒழுங்குமுறைகள் தொடர்பில் விசேட ஊடகவியலாளர் சந்திப்பொன்று இன்றையதினம் (24)…

57 0 0
இலங்கை செய்திகள்

யாழ். வலிகாமம் தெற்கு பிரதேச சபையின் புதிய உள்ளக விளையாட்டு அரங்குக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு.!

யாழ்ப்பாணம் – வலிகாமம் தெற்கு பிரதேச சபையின் புதிய உள்ளக விளையாட்டு அரங்குக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று காலை, பிரதேச சபையின் தலைமை அலுவலக வளாகத்தில்…

41 0 0