உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
24 திங்கள்

சிகரெட், மதுபான பயன்பாட்டால் மனித உயிர்களும் தேசிய வளங்களும் இழப்பு..!

இலங்கை செய்திகள் 7 மாதங்கள் முன்
23 பார்வைகள்

புகையிலை மற்றும் மதுபானப் பயன்பாடு காரணமாக இலங்கையில் ஆண்டுதோறும் சுமார் 22,000 பேர் உயிரிழப்பதுடன், இதன் விளைவாக நாட்டிற்கு வருடத்திற்கு 225 பில்லியன் முதல் 240 பில்லியன் ரூபாய் வரை நட்டம் ஏற்படுவதாக புகையிலை மற்றும் மதுபானம் தொடர்பான தேசிய அதிகார சபையின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

புகையிலை மற்றும் மதுபானம் தொடர்பான தேசிய அதிகார சபை குறித்து, சுகாதார, ஊடக மற்றும் மகளிர் வலுவூட்டல் தொடர்பான துறைசார் மேற்பார்வைக் குழுவில் இடம்பெற்ற நிறுவன ரீதியான மீளாய்வின் போதே அதிகாரிகள் இந்தத் தகவல்களை வெளிப்படுத்தினர்.இந்த நிலைமையிலிருந்து மீள்வதற்குத் தேவையான சட்ட ஏற்பாடுகளை உள்ளடக்கி, புகையிலை மற்றும் மதுபானம் தொடர்பான தேசிய அதிகார சபையின் சட்டத்தைத் திருத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர்.

நாடாளுமன்ற உறுப்பினர் நிஹால் அபேசிங்க தலைமையில் குறித்த குழு கடந்த 21ஆம் திகதி நாடாளுமன்றில் கூடியது. இதன்போது முதலாவதாக புகையிலை மற்றும் மதுபானம் தொடர்பான தேசிய அதிகார சபையின் செயற்பாடுகள் மீளாய்வு செய்யப்பட்டன.உலகில் 104 நாடுகள் தனித்தனி சிகரெட்டுகளை விற்பனை செய்யத் தடை விதித்துள்ளதாகவும், அந்தச் சட்டத்தை இலங்கையிலும் நடைமுறைப்படுத்துவதன் முக்கியத்துவத்தையும் அதிகார சபை இதன்போது வலியுறுத்தியது.

தனித்தனியாக சிகரெட்டுகள் விற்பனை செய்யப்படும் போது, அதன் பொதிகளில் உள்ள எச்சரிக்கை விளம்பரங்கள் நுகர்வோருக்குத் தெரிவதில்லை என்பதையும் அதிகாரிகள் சுட்டிக்காட்டினர்.மேலும், சிகரெட்டுகளுக்கான வரி விதிப்பானது, விலையைத் தீர்மானித்த பின்னரே மேற்கொள்ளப்பட வேண்டியதன் அவசியத்தையும் அதிகாரிகள் இதன்போது வலியுறுத்தினர்.

இங்கு கருத்துத் தெரிவித்த குழுவின் தலைவர், புகையிலை மற்றும் மதுபானம் தொடர்பான தேசிய அதிகார சபையின் சட்டத் திருத்தங்கள் மற்றும் ஏனைய வேலைத்திட்டங்களுக்குத் தேவையான முழுமையான ஒத்துழைப்பை வழங்கத் தயாராக இருப்பதாகத் தெரிவித்தார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

அக்கரைப்பற்று மண்ணுக்கு பெருமை சேர்த்த மல்யுத்த வீரர்.!

2026ஆம் ஆண்டுக்கான Inter University Wrestling Championship மல்யுத்தப் போட்டியில் 70 கிலோ எடைப்பிரிவில் அக்கரைப்பற்றைச் சேர்ந்த I.F. Angelo முதலாம் Runner-Up இடத்தைப் பெற்று வெள்ளிப்…

50 0 0
இலங்கை செய்திகள்

நீர்கொழும்பை மையமாகக் கொண்டு நடைபெற்ற மூன்று சிறப்பு நிகழ்ச்சிகள்.!

42 ஆவது தேசிய மீலாதுன் நபி அரச பெருவிழாவிற்கு இணையாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிகழ்ச்சித் தொடரின் மூன்றாவது நாளான இன்று (ஆகஸ்ட் 24), நீர்கொழும்பு பிரதேசத்தை மையமாகக்…

39 0 0
இலங்கை செய்திகள்

புதுப்பிக்கத்தக்க எரிசக்தி கட்டணங்கள் மற்றும் புதிய விதிமுறைகள் தொடர்பில் ஊடகவியலாளர் சந்திப்பு.!

கொழும்பிலுள்ள இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் (PUCSL) தலைமையகத்தில் புதுப்பிக்கத்தக்க மின்சார சக்திக்கான கட்டணங்கள் மற்றும் புதிய ஒழுங்குமுறைகள் தொடர்பில் விசேட ஊடகவியலாளர் சந்திப்பொன்று இன்றையதினம் (24)…

57 0 0
இலங்கை செய்திகள்

யாழ். வலிகாமம் தெற்கு பிரதேச சபையின் புதிய உள்ளக விளையாட்டு அரங்குக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு.!

யாழ்ப்பாணம் – வலிகாமம் தெற்கு பிரதேச சபையின் புதிய உள்ளக விளையாட்டு அரங்குக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று காலை, பிரதேச சபையின் தலைமை அலுவலக வளாகத்தில்…

41 0 0