உடுத்துறையில் இடம்பெற்ற இலவச மருத்துவ முகாம்.!
யாழ். வடமராட்சி கிழக்கு உடுத்துறையில் இன்றைய தினம் காலை 9 மணியளவில் இலங்கை செஞ்சிலுவை சங்கத்தின் யாழ்ப்பாண கிளையின் ஏற்பாட்டில் இலவச மருத்துவ முகாம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டு மிகவும் மக்கள் வரவேற்புடன் இடம்பெற்றது.
இவ் மருத்துவ முகாமானது உடுத்துறை ஆரம்ப சுகாதார நிலையத்தில் இடம்பெற்றதுடன் நிகழ்வில் வடமராட்சி கிழக்கு சமாச தலைவர் தங்கரூபன் மற்றும் சிகரம் கல்வி நிலையத்தின் வட மாகாண பணிப்பாளர் உதய பாஸ்கரன் மற்றும் உடுத்துறை வாழ் மக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.



