உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
24 திங்கள்

பருத்தித்துறை பிரதேச சபையில் பிரஜா சக்திக்கு எதிராக கொண்டுவரப்பட்ட தீர்மானத்தால் பரபரப்பு..!

இலங்கை செய்திகள் 7 மாதங்கள் முன்
26 பார்வைகள்

பிராஜா சக்திக்கு எதிராக பருத்தித்துறை பிரதேச சபை தவிசாளரால் கொண்டுவரப்பட்ட பிரேரணையால் சபை அமர்வில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பருத்தித்துறை பிரதேச சபை தவிசாளரால் கொண்டுவரப்பட்ட பிரேரணைக்கு 10 வாக்குகள் ஆதரவாகவும், 5 வாக்குகள் நடுநிலமையாகவும், 4 வாக்குகள் எதிராகவும் அளித்ததுடன் ஒருவர் சபை அமர்வில் கலந்துகொள்ளவில்லை.

பருத்தித்துறை பிரதேச சபையின் புதிய ஆண்டிற்கான பருத்தித்துறை பிரதேச சபை அமர்வு தவிசாளர் உதயகுமார் யுகதீஸ் தலைமையில் காலை 9:45 மணியளவில் பிரதேச சபை மாநாட்டு மண்டபத்தில் ஆரம்பமானது.

இதில் தேசிய மக்கள் சக்தியால் கொண்டுவரப்பட்ட பிரஜா சக்தி திட்டத்தை எதிர்ப்பதென்று தவிசாளரால் கொண்டுவரப்பட்ட பிரேரணைக்கு 10 ஆதரவு வாக்குகளும், 4 எதிரான வாக்குகளும், நடுநிலையாக 5 வாக்குகளும் செலுத்தப்பட்டிருந்த நிலையில் பிரேரணை நிறைவேறியது.

அதனை தொடர்ந்து குடத்தனையில் வரவேற்பு வளைவு கேட்டதற்கான கோரிக்கை விவாதிக்கப்பட்டு அதன் எல்லைப்படுத்தல் உட்பட பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக சபையின் குழு ஒன்று ஆய்வு செய்து இறுதி முடிவு எடுக்கப்படும்.

மணல்காடு சமூக காடாக காணப்படும் சவுக்கம் காட்டினை சுற்றுலா நோக்கங்களுக்காக பருத்தித்துறை பிரதேச சபையிடம் ஒப்படைக்க வேண்டும் என்கின்ற கோரிக்கைகளை உரிய தரப்பிற்கு அனுப்பி உரிய சமூக காடான சவுக்கம் காட்டை பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுப்பது என்றும் உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

அக்கரைப்பற்று மண்ணுக்கு பெருமை சேர்த்த மல்யுத்த வீரர்.!

2026ஆம் ஆண்டுக்கான Inter University Wrestling Championship மல்யுத்தப் போட்டியில் 70 கிலோ எடைப்பிரிவில் அக்கரைப்பற்றைச் சேர்ந்த I.F. Angelo முதலாம் Runner-Up இடத்தைப் பெற்று வெள்ளிப்…

50 0 0
இலங்கை செய்திகள்

நீர்கொழும்பை மையமாகக் கொண்டு நடைபெற்ற மூன்று சிறப்பு நிகழ்ச்சிகள்.!

42 ஆவது தேசிய மீலாதுன் நபி அரச பெருவிழாவிற்கு இணையாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிகழ்ச்சித் தொடரின் மூன்றாவது நாளான இன்று (ஆகஸ்ட் 24), நீர்கொழும்பு பிரதேசத்தை மையமாகக்…

39 0 0
இலங்கை செய்திகள்

புதுப்பிக்கத்தக்க எரிசக்தி கட்டணங்கள் மற்றும் புதிய விதிமுறைகள் தொடர்பில் ஊடகவியலாளர் சந்திப்பு.!

கொழும்பிலுள்ள இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் (PUCSL) தலைமையகத்தில் புதுப்பிக்கத்தக்க மின்சார சக்திக்கான கட்டணங்கள் மற்றும் புதிய ஒழுங்குமுறைகள் தொடர்பில் விசேட ஊடகவியலாளர் சந்திப்பொன்று இன்றையதினம் (24)…

57 0 0
இலங்கை செய்திகள்

யாழ். வலிகாமம் தெற்கு பிரதேச சபையின் புதிய உள்ளக விளையாட்டு அரங்குக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு.!

யாழ்ப்பாணம் – வலிகாமம் தெற்கு பிரதேச சபையின் புதிய உள்ளக விளையாட்டு அரங்குக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று காலை, பிரதேச சபையின் தலைமை அலுவலக வளாகத்தில்…

41 0 0