துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்ட இராணுவ சிப்பாய்.!
தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டுக் கொண்ட இராணுவ சிப்பாய் ஒருவர் படுகாயம் அடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் யாழ்ப்பாணம் சாவகச்சேரி தம்பு தோட்டத்தில் அமைந்துள்ள 523 ஆவது இராணுவப் படைப்பிரிவு முகாமில் இன்று(28) காலை 6 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
குருநாகல் பிரதேசத்தை சேர்ந்த 32 வயதுடைய எச்.எம்.டபிள்யூ.பீ. பண்டார என்ற சிப்பாய் படுகாயமடைந்தவராவார்.
வயிற்றுப் பகுதியில் படுகாயம் அடைந்த இராணுவ சிப்பாய் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
துப்பாக்கி சூட்டுக்கான காரணம் அறியப்படாத நிலையில் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.