உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
24 திங்கள்

போலி நகைகளை அடகு வைத்து பல மில்லியன் ரூபாய் மோசடி; வங்கி முகாமையாளர் கைது.!

இலங்கை செய்திகள் 7 மாதங்கள் முன்
29 பார்வைகள்

கொழும்பில் அரச வங்கி ஒன்றில், போலி நகைகளை அடகு வைத்து 163 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான பணத்தை மோசடி செய்த குறித்த வங்கியின் முகாமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபரான இந்திக நிஷாந்த என்ற முகாமையாளரை, அடுத்த மாதம் 09ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த இரண்டு ஆண்டுகளில் சுமார் 26 முறை திட்டமிட்டு இத்தகைய மோசடியில் அவர் ஈடுபட்டுள்ளதை குற்றப் புலனாய்வுத் திணைக்களம் கண்டுபிடித்துள்ளது. அதற்கமைய, பொதுச் சொத்துச் சட்டத்தின் கீழ் இந்த குற்றச்சாட்டுகள் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் குற்றப் புலனாய்வு பிரிவினர் முகாமையாளரை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தினர்.

வங்கியின் பாதுகாப்பு நடைமுறைகளை மீறி, போலிப் பொருட்களை தங்கமாக அடகு வைத்தது விசாரணையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த மோசடி தொடர்பாக மேலதிக தகவல்களைப் பெறவும், இதில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா என அறியவும் பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

அக்கரைப்பற்று மண்ணுக்கு பெருமை சேர்த்த மல்யுத்த வீரர்.!

2026ஆம் ஆண்டுக்கான Inter University Wrestling Championship மல்யுத்தப் போட்டியில் 70 கிலோ எடைப்பிரிவில் அக்கரைப்பற்றைச் சேர்ந்த I.F. Angelo முதலாம் Runner-Up இடத்தைப் பெற்று வெள்ளிப்…

49 0 0
இலங்கை செய்திகள்

நீர்கொழும்பை மையமாகக் கொண்டு நடைபெற்ற மூன்று சிறப்பு நிகழ்ச்சிகள்.!

42 ஆவது தேசிய மீலாதுன் நபி அரச பெருவிழாவிற்கு இணையாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிகழ்ச்சித் தொடரின் மூன்றாவது நாளான இன்று (ஆகஸ்ட் 24), நீர்கொழும்பு பிரதேசத்தை மையமாகக்…

39 0 0
இலங்கை செய்திகள்

புதுப்பிக்கத்தக்க எரிசக்தி கட்டணங்கள் மற்றும் புதிய விதிமுறைகள் தொடர்பில் ஊடகவியலாளர் சந்திப்பு.!

கொழும்பிலுள்ள இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் (PUCSL) தலைமையகத்தில் புதுப்பிக்கத்தக்க மின்சார சக்திக்கான கட்டணங்கள் மற்றும் புதிய ஒழுங்குமுறைகள் தொடர்பில் விசேட ஊடகவியலாளர் சந்திப்பொன்று இன்றையதினம் (24)…

57 0 0
இலங்கை செய்திகள்

யாழ். வலிகாமம் தெற்கு பிரதேச சபையின் புதிய உள்ளக விளையாட்டு அரங்குக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு.!

யாழ்ப்பாணம் – வலிகாமம் தெற்கு பிரதேச சபையின் புதிய உள்ளக விளையாட்டு அரங்குக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று காலை, பிரதேச சபையின் தலைமை அலுவலக வளாகத்தில்…

41 0 0