உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
24 திங்கள்

வீதி விபத்துக்களில் சிக்கி மூன்று பெண்கள் உட்பட நால்வர் உயிரிழப்பு.!

இலங்கை செய்திகள் 7 மாதங்கள் முன்
21 பார்வைகள்

நாட்டின் பல பகுதிகளில் நேற்று (27) இடம்பெற்ற நான்கு வீதி விபத்துக்களில் மூன்று பாதசாரிப் பெண்கள் உட்பட நால்வர் உயிரிழந்துள்ளனர்.

இவ் விபத்துக்கள் மஹரகம, ருவான்வெல்ல, கடுவெல மற்றும் எகொடஉயன ஆகிய பொலிஸ் பிரிவுகளில் இடம்பெற்றுள்ளன.

மஹரகம, பன்னிபிட்டிய சந்திக்கருகில் மஹரகம நோக்கிப் பயணித்த தனியார் பேருந்து ஒன்று வீதியைக் கடந்த பாதசாரி ஒருவர் மீது மோதியதில் விபத்து சம்பவித்துள்ளது.

விபத்தில் காயமடைந்த பெண் ஹோமாகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

ஹொரண பிரதேசத்தைச் சேர்ந்த 77 வயதுடைய பெண்ணொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இதேவேளை கடுவெல சந்திக்கருகில் உந்துருளி ஒன்று வேகக்கட்டுப்பாட்டை இழந்து வீதியில் கவிழ்ந்ததில், ஓட்டுநர் அதே திசையில் பயணித்த லொறி ஒன்றில் சிக்கி விபத்து சம்பவித்துள்ளது.

விபத்தில் சிக்கிய உந்துருளி ஓட்டுநர் பியகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் போதே உயிரிழந்திருந்ததாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

முல்லேரியாவ பிரதேசத்தைச் சேர்ந்த 31 வயதுடைய நபரொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இதேவேளை ருவான்வெல்ல, பன்னல பிரதேசத்தில் வீதியைக் கடந்த பாதசாரிப் பெண் மீது உந்துருளி மோதியதில் விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தில் காயமடைந்த பெண் கரவனெல்ல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

புளத்கொஹுபிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த 54 வயதுடைய பெண்ணொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இதேவேளை எகொடஉயன சந்திக்கருகில் மொரட்டுவ நோக்கிப் பயணித்த பாடசாலைச் சேவை தனியார் பேருந்து ஒன்று, வீதியைக் கடந்த பாதசாரிப் பெண் மீது மோதியதில் விபத்து சம்பவித்துள்ளது.

விபத்தில் காயமடைந்த பெண் பாணந்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் போது உயிரிழந்திருந்தார்.

மொரட்டுவ பிரதேசத்தைச் சேர்ந்த 71 வயதுடைய பெண்ணொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

அக்கரைப்பற்று மண்ணுக்கு பெருமை சேர்த்த மல்யுத்த வீரர்.!

2026ஆம் ஆண்டுக்கான Inter University Wrestling Championship மல்யுத்தப் போட்டியில் 70 கிலோ எடைப்பிரிவில் அக்கரைப்பற்றைச் சேர்ந்த I.F. Angelo முதலாம் Runner-Up இடத்தைப் பெற்று வெள்ளிப்…

49 0 0
இலங்கை செய்திகள்

நீர்கொழும்பை மையமாகக் கொண்டு நடைபெற்ற மூன்று சிறப்பு நிகழ்ச்சிகள்.!

42 ஆவது தேசிய மீலாதுன் நபி அரச பெருவிழாவிற்கு இணையாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிகழ்ச்சித் தொடரின் மூன்றாவது நாளான இன்று (ஆகஸ்ட் 24), நீர்கொழும்பு பிரதேசத்தை மையமாகக்…

39 0 0
இலங்கை செய்திகள்

புதுப்பிக்கத்தக்க எரிசக்தி கட்டணங்கள் மற்றும் புதிய விதிமுறைகள் தொடர்பில் ஊடகவியலாளர் சந்திப்பு.!

கொழும்பிலுள்ள இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் (PUCSL) தலைமையகத்தில் புதுப்பிக்கத்தக்க மின்சார சக்திக்கான கட்டணங்கள் மற்றும் புதிய ஒழுங்குமுறைகள் தொடர்பில் விசேட ஊடகவியலாளர் சந்திப்பொன்று இன்றையதினம் (24)…

57 0 0
இலங்கை செய்திகள்

யாழ். வலிகாமம் தெற்கு பிரதேச சபையின் புதிய உள்ளக விளையாட்டு அரங்குக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு.!

யாழ்ப்பாணம் – வலிகாமம் தெற்கு பிரதேச சபையின் புதிய உள்ளக விளையாட்டு அரங்குக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று காலை, பிரதேச சபையின் தலைமை அலுவலக வளாகத்தில்…

41 0 0