உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
24 திங்கள்

பட்ஜட்டை எதிர்க்காத தமிழ்த் தரப்பு கிவுல் ஓயா திட்டத்துக்கு எதிராக கூக்குரல்.!

இலங்கை செய்திகள் 7 மாதங்கள் முன்
22 பார்வைகள்

2026 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தை எதிர்க்காத தமிழ்த் தரப்பினர், இன்று கிவுல் ஓயா திட்டத்துக்கு எதிராகக் கூக்குரலிடுகின்றனர் என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் நேற்று நடத்திய ஊடக சந்திப்பிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,
“2026 வரவு – செலவுத் திட்டத்தையும், சிங்களக் குடியேற்றத்தையும் நல்லிணக்கம் என்ற போர்வையில் எதிர்க்காத தமிழ்த் தரப்பினர், இன்று கிவுல் ஓயா திட்டத்துக்கு எதிராகக் கூக்குரலிடுகின்றனர். ஆனாலும், அவர்கள் இன்று எதிர்ப்பு வெளியிடுவதை வரவேற்கின்றோம்.

மகாவலி எல் வலயத்துக்குள்ளேயே கிவுல் ஓயா திட்டமும் வருகின்றது. இந்தக் கிவுல் ஓயா திட்டம் தொடர்பில் அரசியல் இலாபம் எடுத்துகொள்வதற்காகவே தமிழரசுக் கட்சி இப்போது எதிர்ப்புத் தெரிவிக்கின்றது. மாகாண சபைத் தேர்தல் வரக்கூடும் என்பதற்காகவே அவர்கள் விழுந்தடித்து நடந்துகொள்கின்றார்கள். ஆகவே, இந்தக் கிவுல் ஓயா திட்டத்துக்கு எதிரான நடவடிக்கைகளை முன்னின்று மேற்கொள்ள சிவில் சமூகம் முன்வரவேண்டும். அதனையே நாங்களும் விரும்புகின்றோம். அவ்வாறான சந்தர்ப்பத்தில் எங்கள் ஆதரவும் அதற்கு இருக்கும்.” – என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

அக்கரைப்பற்று மண்ணுக்கு பெருமை சேர்த்த மல்யுத்த வீரர்.!

2026ஆம் ஆண்டுக்கான Inter University Wrestling Championship மல்யுத்தப் போட்டியில் 70 கிலோ எடைப்பிரிவில் அக்கரைப்பற்றைச் சேர்ந்த I.F. Angelo முதலாம் Runner-Up இடத்தைப் பெற்று வெள்ளிப்…

49 0 0
இலங்கை செய்திகள்

நீர்கொழும்பை மையமாகக் கொண்டு நடைபெற்ற மூன்று சிறப்பு நிகழ்ச்சிகள்.!

42 ஆவது தேசிய மீலாதுன் நபி அரச பெருவிழாவிற்கு இணையாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிகழ்ச்சித் தொடரின் மூன்றாவது நாளான இன்று (ஆகஸ்ட் 24), நீர்கொழும்பு பிரதேசத்தை மையமாகக்…

39 0 0
இலங்கை செய்திகள்

புதுப்பிக்கத்தக்க எரிசக்தி கட்டணங்கள் மற்றும் புதிய விதிமுறைகள் தொடர்பில் ஊடகவியலாளர் சந்திப்பு.!

கொழும்பிலுள்ள இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் (PUCSL) தலைமையகத்தில் புதுப்பிக்கத்தக்க மின்சார சக்திக்கான கட்டணங்கள் மற்றும் புதிய ஒழுங்குமுறைகள் தொடர்பில் விசேட ஊடகவியலாளர் சந்திப்பொன்று இன்றையதினம் (24)…

57 0 0
இலங்கை செய்திகள்

யாழ். வலிகாமம் தெற்கு பிரதேச சபையின் புதிய உள்ளக விளையாட்டு அரங்குக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு.!

யாழ்ப்பாணம் – வலிகாமம் தெற்கு பிரதேச சபையின் புதிய உள்ளக விளையாட்டு அரங்குக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று காலை, பிரதேச சபையின் தலைமை அலுவலக வளாகத்தில்…

41 0 0