உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
24 திங்கள்

நாடாளுமன்ற பிரதி செயலாளர் நாயகத்தின் பணி இடைநீக்கம்.!

இலங்கை செய்திகள் 7 மாதங்கள் முன்
16 பார்வைகள்

நாடாளுமன்ற பிரதி செயலாளர் நாயகமாகப் பணியாற்றிய சமிந்த குலரத்னவின் பணி இடைநீக்கம் குறித்து அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ இன்று (27) கருத்துத் தெரிவித்தார்.அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பின் போது ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

அவர் தொடர்பில் தனிநபர் விசாரணைக்குழு ஒன்றை நியமிக்கத் தீர்மானிக்கப்பட்டதாகவும், எதிர்க்கட்சித் தலைவருக்காக எதிர்க்கட்சியின் முதன்மை அமைப்பாளர் அந்த தீர்மானத்தை எடுத்த குழுவில் பிரதிநிதித்துவப்படுத்தியதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

இதன்படி, கடந்த ஆண்டின் (2025) ஆகஸ்ட் 19ஆம் திகதி இந்த விசாரணைக்குழு நியமிக்கப்பட்டதுடன், பொது நிர்வாக அமைச்சின் அதிகாரியொருவரின் தலைமையில் இந்த விசாரணைகளை முன்னெடுப்பதற்காக அந்தத் தனிநபர் குழு நியமிக்கப்பட்டதாக அமைச்சர் தெரிவித்தார்.

குறித்த குழு இரண்டு பரிந்துரைகளை முன்வைத்துள்ளதாகத் தெரிவித்த அமைச்சர், தவறான தகவல்களை முன்வைத்து நாடாளுமன்ற பணிக்குழாம் பிரதானி மற்றும் நாடாளுமன்ற பிரதி செயலாளர் நாயகம் நியமனத்தைப் பெற்றுக்கொண்டமை, அந்தப் பதவிகளில் சேவையை நிரந்தரமாக்கிக் கொண்டமை, தனக்கு உரிமையில்லாத சம்பளப் பலன்களைப் பெற்றுக்கொண்டமை ஆகியவற்றின் ஊடாக பொதுச் சேவை விதிமுறைகளுக்கு முரணாகச் செயற்பட்டு முறையற்ற அனுகூலங்களைப் பெற்றுக்கொண்டமை மற்றும் நிதி இழப்பை ஏற்படுத்தியமை ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் அவரின் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாகக் கூறினார்.

சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு இலஞ்ச அல்லது ஊழல் விசாரணை ஆணைக்குழுவிற்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

அக்கரைப்பற்று மண்ணுக்கு பெருமை சேர்த்த மல்யுத்த வீரர்.!

2026ஆம் ஆண்டுக்கான Inter University Wrestling Championship மல்யுத்தப் போட்டியில் 70 கிலோ எடைப்பிரிவில் அக்கரைப்பற்றைச் சேர்ந்த I.F. Angelo முதலாம் Runner-Up இடத்தைப் பெற்று வெள்ளிப்…

48 0 0
இலங்கை செய்திகள்

நீர்கொழும்பை மையமாகக் கொண்டு நடைபெற்ற மூன்று சிறப்பு நிகழ்ச்சிகள்.!

42 ஆவது தேசிய மீலாதுன் நபி அரச பெருவிழாவிற்கு இணையாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிகழ்ச்சித் தொடரின் மூன்றாவது நாளான இன்று (ஆகஸ்ட் 24), நீர்கொழும்பு பிரதேசத்தை மையமாகக்…

39 0 0
இலங்கை செய்திகள்

புதுப்பிக்கத்தக்க எரிசக்தி கட்டணங்கள் மற்றும் புதிய விதிமுறைகள் தொடர்பில் ஊடகவியலாளர் சந்திப்பு.!

கொழும்பிலுள்ள இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் (PUCSL) தலைமையகத்தில் புதுப்பிக்கத்தக்க மின்சார சக்திக்கான கட்டணங்கள் மற்றும் புதிய ஒழுங்குமுறைகள் தொடர்பில் விசேட ஊடகவியலாளர் சந்திப்பொன்று இன்றையதினம் (24)…

56 0 0
இலங்கை செய்திகள்

யாழ். வலிகாமம் தெற்கு பிரதேச சபையின் புதிய உள்ளக விளையாட்டு அரங்குக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு.!

யாழ்ப்பாணம் – வலிகாமம் தெற்கு பிரதேச சபையின் புதிய உள்ளக விளையாட்டு அரங்குக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று காலை, பிரதேச சபையின் தலைமை அலுவலக வளாகத்தில்…

40 0 0