உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
24 திங்கள்

மத்திய மலைநாட்டைப் பாதுகாக்க புதிய சட்டம், அதிகார சபை! ஜனாதிபதி அதிரடி அறிவிப்பு.!

இலங்கை செய்திகள் 7 மாதங்கள் முன்
33 பார்வைகள்

மத்திய மலைநாட்டைப் பாதுகாத்து, முன்னேற்றுவதற்கான புதிய சட்டம் மற்றும் அதிகாரசபை நிறுவப்படும் என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.கம்பளை, தொரகல – பீகொக் ஹில் குடியிருப்பின் ஸ்ரீ போதிருக்காராம விஹாரையில் மதத்தலங்களை புரைமைக்குத் தேசிய வேலைத்திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு இன்று இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போது ஜனாதிபதி இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.அனர்த்தத்தைத் தொடர்ந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட மத, கலாசார மற்றும் தொல்பொருள் தலங்கள் சேதமடைந்தன.

அந்த இடங்களில் தேவையான புனரமைப்புப் பணிகளை உடனடியாக ஆரம்பித்து அவற்றை மீளக் கட்டியெழுப்புவதற்கான அனைத்து பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.இதனிடையே, கிராமப்புறத்தின் வறுமையை ஒழிப்பதற்கும் மக்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதற்கும் அரசாங்கம் தற்போது அதிக பணிகளை மேற்கொண்டு வருவதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

இதேவேளை, முதலாம் தரத்திற்கான புதிய கல்வி மறுசீரமைப்புகள் எதிர்வரும் 29ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.அத்துடன், வரலாற்றில் முதன் முறையாக, எதிர்வரும் பெப்ரவரி மாதம் பெருந்தோட்டத் தொழிலாளர்கள் 1,750 ரூபாய் நாளாந்த வேதனத்தை பெறுவார்கள் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

அக்கரைப்பற்று மண்ணுக்கு பெருமை சேர்த்த மல்யுத்த வீரர்.!

2026ஆம் ஆண்டுக்கான Inter University Wrestling Championship மல்யுத்தப் போட்டியில் 70 கிலோ எடைப்பிரிவில் அக்கரைப்பற்றைச் சேர்ந்த I.F. Angelo முதலாம் Runner-Up இடத்தைப் பெற்று வெள்ளிப்…

48 0 0
இலங்கை செய்திகள்

நீர்கொழும்பை மையமாகக் கொண்டு நடைபெற்ற மூன்று சிறப்பு நிகழ்ச்சிகள்.!

42 ஆவது தேசிய மீலாதுன் நபி அரச பெருவிழாவிற்கு இணையாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிகழ்ச்சித் தொடரின் மூன்றாவது நாளான இன்று (ஆகஸ்ட் 24), நீர்கொழும்பு பிரதேசத்தை மையமாகக்…

39 0 0
இலங்கை செய்திகள்

புதுப்பிக்கத்தக்க எரிசக்தி கட்டணங்கள் மற்றும் புதிய விதிமுறைகள் தொடர்பில் ஊடகவியலாளர் சந்திப்பு.!

கொழும்பிலுள்ள இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் (PUCSL) தலைமையகத்தில் புதுப்பிக்கத்தக்க மின்சார சக்திக்கான கட்டணங்கள் மற்றும் புதிய ஒழுங்குமுறைகள் தொடர்பில் விசேட ஊடகவியலாளர் சந்திப்பொன்று இன்றையதினம் (24)…

56 0 0
இலங்கை செய்திகள்

யாழ். வலிகாமம் தெற்கு பிரதேச சபையின் புதிய உள்ளக விளையாட்டு அரங்குக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு.!

யாழ்ப்பாணம் – வலிகாமம் தெற்கு பிரதேச சபையின் புதிய உள்ளக விளையாட்டு அரங்குக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று காலை, பிரதேச சபையின் தலைமை அலுவலக வளாகத்தில்…

40 0 0