உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
24 திங்கள்

யாழில் பல்வேறு துறைகளை உள்ளடக்கி முன்னெடுக்கப்படவுள்ள மாபெரும் கண்காட்சி.!

இலங்கை செய்திகள் 7 மாதங்கள் முன்
29 பார்வைகள்

ரீச்மீயின் ஏற்பாட்டில், வடக்கு மாகாண ரீதியான கல்வி கண்காட்சியானது எதிர்வரும் தை 30 மற்றும் 31ஆம் திகதிகளில் காலை 9.00 மணி தொடக்கம் மாலை 5.00 மணிவரை யாழ்ப்பாணம் திருவள்ளுவர் பண்பாட்டு மையத்தில் நடைபெறவுள்ளதாக ரீச்மீயின் செயற்பாட்டாளர் அஞ்சலிகா தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இன்றையதினம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
நாங்கள் வருடா வருடம் யாழில் இலவச கல்விக் கண்காட்சியை முன்னெடுப்பது வழமை. அந்தவகையில் இந்த கல்விக் கண்காட்சியை இம்முறை மிகவும் பிரமாண்டமான வகையில் ஏற்பாடு செய்துள்ளோம்.

சதுரங்க போட்டி, நடனப் போட்டி, பாடல் போட்டி, திரைப்பட துறை தொடர்பான பயிற்சிகள், உணவுத் திருவிழா, வேலைவாய்ப்புகள், கல்வி கற்பதற்காக புலமைப் பரிசில்களுடன் கூடிய வாய்ப்புகள், வெளிநாட்டு கல்வி வசதி என்பன இந்த கண்காட்சியின்போது இடம்பெறும்.

கல்வியை எவ்வாறு சுவாரஸ்யமான முறையில் மாற்றலாம் என்பதை நாங்கள் இந்த கண்காட்சியின்போது வெளிக்கொணரவுள்ளோம். கடந்த காலங்களில் யாழ்ப்பாணமானது கல்விக்கு பெயர்போன இடமாக இருந்தாலும்கூட தற்போது ஒரு சரிவை சந்தித்துள்ளது. எனவே அதனை மீளவும் கட்டியெழுப்பும் நோக்கில் இந்த கண்காட்சியை ஏற்பாடு செய்துள்ளோம்.

க.பொ.த சாதாரண தரம் கற்றவர்கள், க.பொ.த உயர்தரம் கற்றவர்கள் மற்றும் பல்கலைக்கழக கல்வியை தொடர்பவர்கள் என அனைவருக்கும் இந்த கண்காட்சி பயனுள்ளதாக அமையும் என தெரிவித்தார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

அக்கரைப்பற்று மண்ணுக்கு பெருமை சேர்த்த மல்யுத்த வீரர்.!

2026ஆம் ஆண்டுக்கான Inter University Wrestling Championship மல்யுத்தப் போட்டியில் 70 கிலோ எடைப்பிரிவில் அக்கரைப்பற்றைச் சேர்ந்த I.F. Angelo முதலாம் Runner-Up இடத்தைப் பெற்று வெள்ளிப்…

2 0 0
இலங்கை செய்திகள்

நீர்கொழும்பை மையமாகக் கொண்டு நடைபெற்ற மூன்று சிறப்பு நிகழ்ச்சிகள்.!

42 ஆவது தேசிய மீலாதுன் நபி அரச பெருவிழாவிற்கு இணையாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிகழ்ச்சித் தொடரின் மூன்றாவது நாளான இன்று (ஆகஸ்ட் 24), நீர்கொழும்பு பிரதேசத்தை மையமாகக்…

38 0 0
இலங்கை செய்திகள்

புதுப்பிக்கத்தக்க எரிசக்தி கட்டணங்கள் மற்றும் புதிய விதிமுறைகள் தொடர்பில் ஊடகவியலாளர் சந்திப்பு.!

கொழும்பிலுள்ள இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் (PUCSL) தலைமையகத்தில் புதுப்பிக்கத்தக்க மின்சார சக்திக்கான கட்டணங்கள் மற்றும் புதிய ஒழுங்குமுறைகள் தொடர்பில் விசேட ஊடகவியலாளர் சந்திப்பொன்று இன்றையதினம் (24)…

56 0 0
இலங்கை செய்திகள்

யாழ். வலிகாமம் தெற்கு பிரதேச சபையின் புதிய உள்ளக விளையாட்டு அரங்குக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு.!

யாழ்ப்பாணம் – வலிகாமம் தெற்கு பிரதேச சபையின் புதிய உள்ளக விளையாட்டு அரங்குக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று காலை, பிரதேச சபையின் தலைமை அலுவலக வளாகத்தில்…

40 0 0