உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
24 திங்கள்

நாவிதன்வெளி பிரதேச சபையின் ஏற்பாட்டில் நடைபெற்ற தைப்பொங்கல் விழா.!

இலங்கை செய்திகள் 7 மாதங்கள் முன்
31 பார்வைகள்

நாவிதன்வெளி பிரதேச சபையின் ஏற்பாட்டில் உழவர் திருநாளாம் தைப்பொங்கல் விழா கோலாகலமாக நடைபெற்றது.

இவ் விழா நாவிதன்வெளி பிரதேச சபையின் தவிசாளர் இந்திரன் ரூபசாந்தன் தலைமையில் தமிழர் பாரம்பரியத்தை பிரதிபலிக்கும் வகையில் அறுவடை நிகழ்வு, புதிர் எடுத்தல், நெல் குற்றி புத்தரிசி எடுத்து பொங்கல் வைக்கும் நிகழ்வுகள் என்பன இடம்பெற்றன.

இந் நிகழ்வுகளை பிரதம அதிதியாக கலந்து கொண்ட அம்பாறை மாவட்ட உதவி உள்ளூராட்சி ஆணையாளர் ஐ.எஸ்.ஏ.கமல் நெத்மினி ஆரம்பித்து வைத்தார்.

மேலும் உழவர் கண்காட்சியும், பாடசாலை மாணவர்களினால் தமிழரின் கலை, கலாச்சார, பண்பாட்டு விழுமியங்களை பறைசாற்றும் வகையில் பாரம்பரிய நடனங்கள், சிலம்பம் உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்வுகளும் இடம்பெற்று விழாவை சிறப்பித்தன.

இதன்போது உரையாற்றிய தவிசாளர் இந்திரன் ரூபசாந்தன்,
“தைப்பொங்கல் என்பது ஒரு சமய விழா மட்டும் அல்ல. அது உழைப்பின் திருவிழா. விவசாயியின் வியர்வைக்கு மரியாதை செலுத்தும் நாள். இயற்கைக்கு நன்றி கூறும் நாள். ‘தை பிறந்தால் வழி பிறக்கும்’ என்ற பழமொழிக்கேற்ப, இந்த தை மாதம் அனைவருக்கும் புதிய நம்பிக்கை, புதிய பாதை, புதிய முன்னேற்றத்தை கொண்டு வர வேண்டும். பல இனங்கள், பல மதங்கள், பல பண்பாடுகள் ஒற்றுமையாக வாழும் நாவிதன்வெளி பிரதேசத்தின் ஒற்றுமையே எங்கள் பலமாகும். மக்களின் நலன், இளைஞர்களின் எதிர்காலம், விவசாய வளர்ச்சி, கல்வி, சுகாதாரம் மற்றும் அடிப்படை வசதிகள் தொடர்பில் பிரதேச சபை தொடர்ந்து செயல்பட்டு வருகிறது” என தெரிவித்தார்.

விழாவில் கலந்து கொண்ட அதிதிகளுக்கு தமிழர் மாண்பை எடுத்தியம்பும் வகையில் நினைவுச் சின்னங்கள், நவதானியங்கள் அடங்கிய பொற்கிழிகள் வழங்கப்பட்டு, பொன்னாடை போர்த்தி மரியாதை செலுத்தப்பட்டது.

இத் தமிழர் பாரம்பரிய பொங்கல் விழாவில் பிரதம அதிதியாக அம்பாறை மாவட்ட உதவி உள்ளூராட்சி ஆணையாளர் கமல் நெத்மினி, சிறப்பு அதிதியாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன், முன்னாள் பிரதி பிரதம செயலாளர் மு.கோபாலரெத்தினம், முன்னாள் தவிசாளர்கள், நாவிதன்வெளி பிரதேச சபை உப தவிசாளர் கு. புவனரூபன், பிரதேச சபை உறுப்பினர்கள், செயலாளர், சுகாதார வைத்திய அதிகாரி, பாடசாலை மாணவர்கள், பெற்றோர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

அக்கரைப்பற்று மண்ணுக்கு பெருமை சேர்த்த மல்யுத்த வீரர்.!

2026ஆம் ஆண்டுக்கான Inter University Wrestling Championship மல்யுத்தப் போட்டியில் 70 கிலோ எடைப்பிரிவில் அக்கரைப்பற்றைச் சேர்ந்த I.F. Angelo முதலாம் Runner-Up இடத்தைப் பெற்று வெள்ளிப்…

2 0 0
இலங்கை செய்திகள்

நீர்கொழும்பை மையமாகக் கொண்டு நடைபெற்ற மூன்று சிறப்பு நிகழ்ச்சிகள்.!

42 ஆவது தேசிய மீலாதுன் நபி அரச பெருவிழாவிற்கு இணையாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிகழ்ச்சித் தொடரின் மூன்றாவது நாளான இன்று (ஆகஸ்ட் 24), நீர்கொழும்பு பிரதேசத்தை மையமாகக்…

38 0 0
இலங்கை செய்திகள்

புதுப்பிக்கத்தக்க எரிசக்தி கட்டணங்கள் மற்றும் புதிய விதிமுறைகள் தொடர்பில் ஊடகவியலாளர் சந்திப்பு.!

கொழும்பிலுள்ள இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் (PUCSL) தலைமையகத்தில் புதுப்பிக்கத்தக்க மின்சார சக்திக்கான கட்டணங்கள் மற்றும் புதிய ஒழுங்குமுறைகள் தொடர்பில் விசேட ஊடகவியலாளர் சந்திப்பொன்று இன்றையதினம் (24)…

56 0 0
இலங்கை செய்திகள்

யாழ். வலிகாமம் தெற்கு பிரதேச சபையின் புதிய உள்ளக விளையாட்டு அரங்குக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு.!

யாழ்ப்பாணம் – வலிகாமம் தெற்கு பிரதேச சபையின் புதிய உள்ளக விளையாட்டு அரங்குக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று காலை, பிரதேச சபையின் தலைமை அலுவலக வளாகத்தில்…

40 0 0