உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
24 திங்கள்

நாடளாவிய ரீதியில் விசேட சுற்றிவளைப்பு; 728 பேர் கைது..!

இலங்கை செய்திகள் 7 மாதங்கள் முன்
24 பார்வைகள்

நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் ‘முழு நாடும் ஒன்றாக’ தேசிய செயற்பாட்டின் கீழ் நேற்று (26) மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புகளில் 728 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்விடயம் பொலிஸ் ஊடகப் பிரிவு இன்று (27) வெளியிட்டுள்ள தினசரி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந் நடவடிக்கையின் போது ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருள் தொடர்பாக 498 சுற்றிவளைப்புகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், மொத்தம் 767 கிராம் ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருட்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

நாடளாவிய ரீதியில் போதைப்பொருள் விநியோகத்தை முடக்குதல், போதைப்பொருள் தேவையைக் குறைத்தல், சுற்றிவளைப்பு நடவடிக்கைகளை விரிவுபடுத்தல், போதைக்கு அடிமையானவர்களைப் புனர்வாழ்வளித்தல் மற்றும் போதைப்பொருள் துஷ்பிரயோகத்தைத் தடுத்தல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்ட ‘முழு நாடும் ஒன்றாக’ தேசிய செயற்பாட்டின் இன்றைய அறிக்கையின்படி, 09 சந்தேகநபர்களுக்கு எதிராக தடுப்புக்காவல் உத்தரவுகள் பெறப்பட்டுள்ளன.

இதேவேளை, ஒரு சந்தேகநபர் புனர்வாழ்விற்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

அக்கரைப்பற்று மண்ணுக்கு பெருமை சேர்த்த மல்யுத்த வீரர்.!

2026ஆம் ஆண்டுக்கான Inter University Wrestling Championship மல்யுத்தப் போட்டியில் 70 கிலோ எடைப்பிரிவில் அக்கரைப்பற்றைச் சேர்ந்த I.F. Angelo முதலாம் Runner-Up இடத்தைப் பெற்று வெள்ளிப்…

2 0 0
இலங்கை செய்திகள்

நீர்கொழும்பை மையமாகக் கொண்டு நடைபெற்ற மூன்று சிறப்பு நிகழ்ச்சிகள்.!

42 ஆவது தேசிய மீலாதுன் நபி அரச பெருவிழாவிற்கு இணையாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிகழ்ச்சித் தொடரின் மூன்றாவது நாளான இன்று (ஆகஸ்ட் 24), நீர்கொழும்பு பிரதேசத்தை மையமாகக்…

38 0 0
இலங்கை செய்திகள்

புதுப்பிக்கத்தக்க எரிசக்தி கட்டணங்கள் மற்றும் புதிய விதிமுறைகள் தொடர்பில் ஊடகவியலாளர் சந்திப்பு.!

கொழும்பிலுள்ள இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் (PUCSL) தலைமையகத்தில் புதுப்பிக்கத்தக்க மின்சார சக்திக்கான கட்டணங்கள் மற்றும் புதிய ஒழுங்குமுறைகள் தொடர்பில் விசேட ஊடகவியலாளர் சந்திப்பொன்று இன்றையதினம் (24)…

56 0 0
இலங்கை செய்திகள்

யாழ். வலிகாமம் தெற்கு பிரதேச சபையின் புதிய உள்ளக விளையாட்டு அரங்குக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு.!

யாழ்ப்பாணம் – வலிகாமம் தெற்கு பிரதேச சபையின் புதிய உள்ளக விளையாட்டு அரங்குக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று காலை, பிரதேச சபையின் தலைமை அலுவலக வளாகத்தில்…

40 0 0