உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
24 திங்கள்

முல்லைத்தீவில் விவசாயிகளுக்கு வெளியான மகிழ்ச்சி செய்தி.!

இலங்கை செய்திகள் 7 மாதங்கள் முன்
28 பார்வைகள்

நெல் சந்தைப்படுத்தல் சபையினர் விவசாயிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி ஒன்றினை வெளியிட்டுள்ளனர். அதன்படி, முல்லைத்தீவில் நெல் சந்தைப்படுத்தல் சபை நாளை (28.01.2026) தொடக்கம் நெல் கொள்வனவினை நியாயமான விலையில் மேற்கொள்ள உள்ளதாக அறிவித்துள்ளனர்.

இதன்மூலம் விவசாயிகள் அறுவடை செய்த நெல்லை நியாயமான முறையில் விற்பனை செய்ய முடியும்.

அந்தவகையில் வெள்ளை, சிவப்பு நாட்டரிசி – கிலோ 120, சிவப்பு, வெள்ளை சம்பா – கிலோ 130, கீரிசம்பா கிலோ – 140, ரூபாய்க்கும் கொள்வனவு செய்யப்பட இருக்கின்றது.

அத்தோடு கொள்வனவு செய்யப்படும் நெல் ஈரப்பதன் 14 வீதத்திற்குள்ளாக இருக்க வேண்டும்.

நெல்லுடன் ஏனைய கலப்படங்கள் 1 வீதத்திற்குட்பட்டதாகவும் ஏனைய நெல்லினங்களின் கலப்பு 6 வீதத்திற்குட்பட்டதாகவும் சப்பி 9 வீதத்திற்குட்பட்டதாக இருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

அக்கரைப்பற்று மண்ணுக்கு பெருமை சேர்த்த மல்யுத்த வீரர்.!

2026ஆம் ஆண்டுக்கான Inter University Wrestling Championship மல்யுத்தப் போட்டியில் 70 கிலோ எடைப்பிரிவில் அக்கரைப்பற்றைச் சேர்ந்த I.F. Angelo முதலாம் Runner-Up இடத்தைப் பெற்று வெள்ளிப்…

48 0 0
இலங்கை செய்திகள்

நீர்கொழும்பை மையமாகக் கொண்டு நடைபெற்ற மூன்று சிறப்பு நிகழ்ச்சிகள்.!

42 ஆவது தேசிய மீலாதுன் நபி அரச பெருவிழாவிற்கு இணையாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிகழ்ச்சித் தொடரின் மூன்றாவது நாளான இன்று (ஆகஸ்ட் 24), நீர்கொழும்பு பிரதேசத்தை மையமாகக்…

38 0 0
இலங்கை செய்திகள்

புதுப்பிக்கத்தக்க எரிசக்தி கட்டணங்கள் மற்றும் புதிய விதிமுறைகள் தொடர்பில் ஊடகவியலாளர் சந்திப்பு.!

கொழும்பிலுள்ள இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் (PUCSL) தலைமையகத்தில் புதுப்பிக்கத்தக்க மின்சார சக்திக்கான கட்டணங்கள் மற்றும் புதிய ஒழுங்குமுறைகள் தொடர்பில் விசேட ஊடகவியலாளர் சந்திப்பொன்று இன்றையதினம் (24)…

56 0 0
இலங்கை செய்திகள்

யாழ். வலிகாமம் தெற்கு பிரதேச சபையின் புதிய உள்ளக விளையாட்டு அரங்குக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு.!

யாழ்ப்பாணம் – வலிகாமம் தெற்கு பிரதேச சபையின் புதிய உள்ளக விளையாட்டு அரங்குக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று காலை, பிரதேச சபையின் தலைமை அலுவலக வளாகத்தில்…

40 0 0