உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
24 திங்கள்

மானிப்பாய் சபை அமர்வின் போது தூக்கி வீசப்பட்ட அறிக்கை!

இலங்கை செய்திகள் 7 மாதங்கள் முன்
26 பார்வைகள்

மானிப்பாய் சபை அமர்வின் போது கணக்கறிக்கை தொடர்பான பிரச்சினையால் அந்த கணக்கறிக்கையானது தூக்கி வீசப்பட்டது.இது குறித்து மேலும் தெரியவருகையில்,மானிப்பாய் பிரதேச சபையின் மாதாந்த அமர்வு நேற்றுமுன்தினம் தவிசாளர் ஜெசீதன் தலைமையில் ஆரம்பமானது.இதன்போது கணக்கறிக்கையானது சபையில் சமர்ப்பிக்கப்பட்டது.

குறித்த கணக்கறிக்கையை உடனே வழங்குவதால் அதில் உள்ள பிழைகளை உடனே கண்டுபிடிப்பது கடினம் என்றும், அந்த கணக்கறிக்கையை கூட்டம் நடைபெறுவதற்கு முன்னைய நாட்களில் வழங்க வேண்டும் என்றும் உறுப்பினர் நா.பகீரதன் தெரிவித்தார்.

இதன்போது குறுக்கிட்ட தவிசாளர் ஜெசீதன், கணக்கறிக்கையில் தவறு உள்ளது என்றால், அந்த அறிக்கை சபையில் முன்மொழிந்து, வழிமொழிய முன்னர் அதில் தவறு உள்ளது என்று கூற வேண்டும்.எல்லாம் முடிந்த பின்னர் கூறக்கூடாது என தெரிவித்தார்.

அந்தநேரத்தில் தவிசாளருக்கும், குறித்த உறுப்பினருக்குமிடையே கடுமையான வாதப்பிரதிவாதங்கள் உண்டான நிலையில் உறுப்பினர் தனது கையில் இருந்த கணக்கறிக்கையை தூக்கி சபையில் வீசி எறிந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

யாழ். வலிகாமம் தெற்கு பிரதேச சபையின் புதிய உள்ளக விளையாட்டு அரங்குக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு.!

யாழ்ப்பாணம் – வலிகாமம் தெற்கு பிரதேச சபையின் புதிய உள்ளக விளையாட்டு அரங்குக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று காலை, பிரதேச சபையின் தலைமை அலுவலக வளாகத்தில்…

33 0 0
இலங்கை செய்திகள்

யாழில் தங்கச் சங்கிலியை உரிமையாளரிடம் ஒப்படைத்த பேருந்து சாரதியும், நடத்துனரும்.!

இ.போ.ச. பேருந்தில் பெண் பயணி ஒருவர் தொலைத்த 10 இலட்சம் ரூபாய் பெறுமதியான தங்கச் சங்கிலியை மீட்ட நடத்துநரும் சாரதியும், உரியவரிடமே அந்த நகையை ஒப்படைத்துள்ளனர். இந்தச்…

54 0 0
இலங்கை செய்திகள்

தியவன்னா ஓயாவில் விழுந்த பெண் கடற்படையினரால் மீட்பு.!

பத்தரமுல்ல, ஜப்பான் நற்புறவு வீதியின் சதுன் உயன பகுதியில் இன்று (24) நண்பகல் தியவன்னா ஓயா ஆற்றில் விழுந்த 59 வயதுடைய பெண்ணொருவர் இலங்கை கடற்படையினரால் பாதுகாப்பாக…

60 0 0
இலங்கை செய்திகள்

சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தின மாநாட்டிற்கு அனைவரும் கை கொடுக்க வேண்டும்.!

யாழ்ப்பாணத்தில் எதிர்வரும் 30 ஆம் திகதி இடம்பெற உள்ள சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தையொட்டி முன்னெடுக்கப்படவுள்ள மாநாட்டிற்கு தமிழ் தேசியத்தை விரும்பும் அனைவரும் கை கொடுக்க வேண்டும்…

58 0 0