உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
24 திங்கள்

இஷாரா செவ்வந்தியை மேலும் 90 நாட்கள் தடுத்து வைத்து விசாரிக்க உத்தரவு!

இலங்கை செய்திகள் 7 மாதங்கள் முன்
31 பார்வைகள்

திட்டமிட்ட குற்றக்கும்பல் உறுப்பினர் கணேமுல்ல சஞ்சீவின் படுகொலை செய்யப்படுவதற்கு உடந்தையாக இருந்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட சந்தேகநபர் இஷாரா செவ்வந்தி 90 நாட்கள் மேலதிக தடுப்பு காவலில் வைக்க நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.


கொழும்பு பிரதான நீதவான் அஸங்க எஸ். போதரகம் முன்னிலையில் வழக்கு விசாரணை நடைபெற்றது. 90 நாட்களுக்கான முன் தடுப்புக்காவல் ஜனவரி 15ஆம் திகதியுடன் முடிவடைந்த நிலையில், மேலதிக விசாரணைகளுக்காக அவரை தொடர்ந்தும் காவலில் வைக்க நீதவான் அனுமதி வழங்கினார்.இந்த கொலை சம்பவத்தில் தொடர்புடைய எட்டு சந்தேகநபர்கள் வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்றுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

அவர்களைக் கைது செய்வதற்காக சர்வதேச காவல்துறைக்கு ‘சிவப்பு அறிவித்தல்’ (Red Notice) பிறப்பிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. குறிப்பாக சம்பத் அஷேன், ஷான் அரோஷ் (மத்துகம ஷான்), படுவத்தே சாமர மற்றும் டுபாய் சுத்தா ஆகிய சந்தேகநபர்களுக்கு எதிராக சிவப்பு அறிவித்தல் பிறப்பிக்கப்படவுள்ளது.


வழக்கில் நான்கு சந்தேகநபர்கள் நேரடியாக நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனர், ஏனையவர்கள் {Zoom } தொழில்நுட்பம் மூலம் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.மீதமுள்ள சந்தேகநபர்கள் பெப்ரவரி 6 வரை விளக்கமறியலில் வைக்கப்படுவார்கள் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

யாழ். வலிகாமம் தெற்கு பிரதேச சபையின் புதிய உள்ளக விளையாட்டு அரங்குக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு.!

யாழ்ப்பாணம் – வலிகாமம் தெற்கு பிரதேச சபையின் புதிய உள்ளக விளையாட்டு அரங்குக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று காலை, பிரதேச சபையின் தலைமை அலுவலக வளாகத்தில்…

33 0 0
இலங்கை செய்திகள்

யாழில் தங்கச் சங்கிலியை உரிமையாளரிடம் ஒப்படைத்த பேருந்து சாரதியும், நடத்துனரும்.!

இ.போ.ச. பேருந்தில் பெண் பயணி ஒருவர் தொலைத்த 10 இலட்சம் ரூபாய் பெறுமதியான தங்கச் சங்கிலியை மீட்ட நடத்துநரும் சாரதியும், உரியவரிடமே அந்த நகையை ஒப்படைத்துள்ளனர். இந்தச்…

54 0 0
இலங்கை செய்திகள்

தியவன்னா ஓயாவில் விழுந்த பெண் கடற்படையினரால் மீட்பு.!

பத்தரமுல்ல, ஜப்பான் நற்புறவு வீதியின் சதுன் உயன பகுதியில் இன்று (24) நண்பகல் தியவன்னா ஓயா ஆற்றில் விழுந்த 59 வயதுடைய பெண்ணொருவர் இலங்கை கடற்படையினரால் பாதுகாப்பாக…

60 0 0
இலங்கை செய்திகள்

சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தின மாநாட்டிற்கு அனைவரும் கை கொடுக்க வேண்டும்.!

யாழ்ப்பாணத்தில் எதிர்வரும் 30 ஆம் திகதி இடம்பெற உள்ள சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தையொட்டி முன்னெடுக்கப்படவுள்ள மாநாட்டிற்கு தமிழ் தேசியத்தை விரும்பும் அனைவரும் கை கொடுக்க வேண்டும்…

58 0 0