உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
24 திங்கள்

வடக்கில் பெண் தலைமைத்துவ குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவிகள்; முன்வந்துள்ள புலம்பெயர் தமிழ் குடும்பத்தினர்.!

இலங்கை செய்திகள் 7 மாதங்கள் முன்
33 பார்வைகள்

வடக்கு மாகாணத்தில் ஆயிரம் பெண் தலைமைத்துவ குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவித் திட்டத்தை சிங்கப்பூரைச் சேர்ந்த புலம்பெயர் தமிழ் குடும்பத்தினர் வழங்க முன்வந்துள்ளனர் என்று வடக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினரும் யாழ் வணிகர் கழக முன்னாள் தலைவருமான இ. ஜெயசேகரம் தெரிவித்தார்.


ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், வடக்கு மாகாணத்தின் ஐந்து மாவட்டங்களை உள்ளடக்கிய, வாழ்வாதார சவால்களை எதிர்கொண்ட சுமார் 1,000 பெண் தலைமைத்துவ குடும்பங்களுக்கு தொழில் வாய்ப்புகளை ஏற்படுத்தும் திட்டம் விரைவில் அமுல்படுத்தப்படவுள்ளது.
இந்தத் திட்டத்தின் முதல் கட்ட நிகழ்வு எதிர்வரும் 28ம் திகதி புதன்கிழமையன்று கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில், அரச அதிபர் சு. முரளிதரன் தலைமையில் நடைபெற உள்ளது.

இதில் 181 பெண் தலைமைத்துவ குடும்பங்களுக்கு பொருத்தமான வாழ்வாதார உதவிகள் வழங்கப்படவுள்ளன.கடந்தகால போர்சூழ்நிலையும், அண்மையில் ஏற்பட்ட புயல் அனர்த்தமும் காரணமாக பாதிக்கப்பட்ட பெண்தலைமைத்துவ குடும்பங்களுக்கு இந்த உதவி திட்டம் வழங்கப்படுகின்றது.

இதன் மூலம் அவர்களது குழந்தைகளின் கல்வி, ஆரோக்கியம் மற்றும் வாழ்க்கைத் தரம் மேம்பட உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.இத்திட்டத்திற்கான நிதிப் பங்களிப்பை சிங்கப்பூரைச் சேர்ந்த ரி.ரி.துரை தம்பதிகள் மற்றும் சரசீஜா ராமன் ஆகியோர் வழங்க முன்வந்துள்ளனர்.முதல் உதவி நடவடிக்கை கிளிநொச்சியில் நடைபெறும்; அதன் பிறகு முல்லைத்தீவு, மன்னார், வவுனியா மற்றும் யாழ்ப்பாணம் மாவட்டங்களுக்கும் இதே வகையில் வழங்கப்படவுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

யாழ். வலிகாமம் தெற்கு பிரதேச சபையின் புதிய உள்ளக விளையாட்டு அரங்குக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு.!

யாழ்ப்பாணம் – வலிகாமம் தெற்கு பிரதேச சபையின் புதிய உள்ளக விளையாட்டு அரங்குக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று காலை, பிரதேச சபையின் தலைமை அலுவலக வளாகத்தில்…

33 0 0
இலங்கை செய்திகள்

யாழில் தங்கச் சங்கிலியை உரிமையாளரிடம் ஒப்படைத்த பேருந்து சாரதியும், நடத்துனரும்.!

இ.போ.ச. பேருந்தில் பெண் பயணி ஒருவர் தொலைத்த 10 இலட்சம் ரூபாய் பெறுமதியான தங்கச் சங்கிலியை மீட்ட நடத்துநரும் சாரதியும், உரியவரிடமே அந்த நகையை ஒப்படைத்துள்ளனர். இந்தச்…

54 0 0
இலங்கை செய்திகள்

தியவன்னா ஓயாவில் விழுந்த பெண் கடற்படையினரால் மீட்பு.!

பத்தரமுல்ல, ஜப்பான் நற்புறவு வீதியின் சதுன் உயன பகுதியில் இன்று (24) நண்பகல் தியவன்னா ஓயா ஆற்றில் விழுந்த 59 வயதுடைய பெண்ணொருவர் இலங்கை கடற்படையினரால் பாதுகாப்பாக…

60 0 0
இலங்கை செய்திகள்

சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தின மாநாட்டிற்கு அனைவரும் கை கொடுக்க வேண்டும்.!

யாழ்ப்பாணத்தில் எதிர்வரும் 30 ஆம் திகதி இடம்பெற உள்ள சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தையொட்டி முன்னெடுக்கப்படவுள்ள மாநாட்டிற்கு தமிழ் தேசியத்தை விரும்பும் அனைவரும் கை கொடுக்க வேண்டும்…

58 0 0