உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
24 திங்கள்

செம்பியன்பற்றில் பாரம்பரிய தென் மோடி நாட்டுக்கூத்து காப்புப் பாடலுடன் ஆரம்பம்.!

இலங்கை செய்திகள் 7 மாதங்கள் முன்
27 பார்வைகள்

இன்றைய தினம் மாலை 5 மணியளவில் செம்பியன்பற்று வடக்கு புனித பிலிப்பு நேரியார் ஆலயத்தில், அண்ணாவியார் கலைச்சாரம் றோக்கு யூட்சன் செபஸ்தியார் அவர்களின் நெறிப்படுத்தலில், யுவானியர் தென் மோடி நாட்டுக்கூத்தின் காப்புப் பாடல் ஆலயத்தில் செம்பியன்பற்று பங்கு மக்களின் முன்னிலையில் பாடப்பட்டு நிகழ்வு ஆரம்பிக்கப்பட்டது.


குறித்த தென் மோடி நாட்டுக்கூத்து, வரலாற்றுச் சிறப்பு மிக்க புனித பிலிப்பு நேரியார் ஆலய திருவிழாவை முன்னிட்டு, எதிர்வரும் வைகாசி மாதம் 26 ஆம் திகதி பிற்பகல் 9.30 மணியளவில் மேடையேறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து, செம்பியன்பற்று பங்கு மக்களின் வரலாற்றுப் பாரம்பரிய நிகழ்வாக இடம் பெற்று வரும் புனித செபஸ்தியார் திருவிழாவின் விருந்து உபசார நிகழ்வு, செம்பியன்பற்று பங்கு தந்தை ஜஸ்டின் ஆதர் அவர்களின் தலைமையில், காப்புப் பாடலைத் தொடர்ந்து மிகச் சிறப்பாக நடைபெற்றது.

குறித்த நிகழ்வில், வடமராட்சி கிழக்கு பகுதி முழுவதிலும் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

யாழ். வலிகாமம் தெற்கு பிரதேச சபையின் புதிய உள்ளக விளையாட்டு அரங்குக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு.!

யாழ்ப்பாணம் – வலிகாமம் தெற்கு பிரதேச சபையின் புதிய உள்ளக விளையாட்டு அரங்குக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று காலை, பிரதேச சபையின் தலைமை அலுவலக வளாகத்தில்…

33 0 0
இலங்கை செய்திகள்

யாழில் தங்கச் சங்கிலியை உரிமையாளரிடம் ஒப்படைத்த பேருந்து சாரதியும், நடத்துனரும்.!

இ.போ.ச. பேருந்தில் பெண் பயணி ஒருவர் தொலைத்த 10 இலட்சம் ரூபாய் பெறுமதியான தங்கச் சங்கிலியை மீட்ட நடத்துநரும் சாரதியும், உரியவரிடமே அந்த நகையை ஒப்படைத்துள்ளனர். இந்தச்…

54 0 0
இலங்கை செய்திகள்

தியவன்னா ஓயாவில் விழுந்த பெண் கடற்படையினரால் மீட்பு.!

பத்தரமுல்ல, ஜப்பான் நற்புறவு வீதியின் சதுன் உயன பகுதியில் இன்று (24) நண்பகல் தியவன்னா ஓயா ஆற்றில் விழுந்த 59 வயதுடைய பெண்ணொருவர் இலங்கை கடற்படையினரால் பாதுகாப்பாக…

60 0 0
இலங்கை செய்திகள்

சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தின மாநாட்டிற்கு அனைவரும் கை கொடுக்க வேண்டும்.!

யாழ்ப்பாணத்தில் எதிர்வரும் 30 ஆம் திகதி இடம்பெற உள்ள சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தையொட்டி முன்னெடுக்கப்படவுள்ள மாநாட்டிற்கு தமிழ் தேசியத்தை விரும்பும் அனைவரும் கை கொடுக்க வேண்டும்…

58 0 0