உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
24 திங்கள்

முல்லை கடற்கரையில் மாபெரும் பட்டத்திருவிழா; ரவிகரன் எம்.பி பங்கேற்பு.!

இலங்கை செய்திகள் 7 மாதங்கள் முன்
29 பார்வைகள்

முல்லைத்தீவு சுற்றுலாக் கடற்கரையில் 25.01.2026 இன்றையதினம் மாபெரும் பட்டத்திருவிழாஇடம்பெற்றது.அந்தவகையில் வட்டுவாகல் புலம்பெயர் உறவுகள் மற்றும் வட்டுவாகல் கிராமமக்களின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்த மாபெரும் பட்டத்திருவிழா நிகழ்வில் முதன்மை விருந்தினராக வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் பங்கேற்றார்.

அந்தவகையில் மரபுவழியில் விருந்தினர்களது வரவேற்புடன் தொடங்கிய இந்நிகழ்வில் தொடர்ந்து மங்கலவிளக்கேற்றல் இடம்பெற்றது.அதனைத்தொடர்ந்து பட்டத்திருவிழாவிற்கான பட்டங்கள் விருந்தினர்களால் கையளிக்கப்பட்டதைத் தொடர்ந்து பட்டத்திருவிழா இனிதே ஆரம்பித்தது.

அந்தவகையில் மிகவும் பெருந்திரளான மக்கள் இந்தப் பட்டத்திருவிழாவில் பங்கேற்றிருந்தனர்.இந்நிலையில் முல்லைத்தீவு கடற்கரையின் வான்பரப்பானது அழகிய வண்ணப் பட்டங்களால் நிறைந்திருந்தது.

அந்தவகையில் இந்த மாபெரும் பட்டத்திருவிழாவில் விருந்தினர்களாக வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், முல்லைத்தீவு மாவட்ட செயலாளர் அ.உமாமகேஸ்வரன்,. கரைதுறைப்பற்று பிரதேசசபையின் செயலாளர் திருமதி. இராஜயோகினி ஜெயக்குமார், கரைதுறைப்பற்று உதவிப் பிரதேசசெயலாளர் எனப் பலரும் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

யாழ். வலிகாமம் தெற்கு பிரதேச சபையின் புதிய உள்ளக விளையாட்டு அரங்குக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு.!

யாழ்ப்பாணம் – வலிகாமம் தெற்கு பிரதேச சபையின் புதிய உள்ளக விளையாட்டு அரங்குக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று காலை, பிரதேச சபையின் தலைமை அலுவலக வளாகத்தில்…

33 0 0
இலங்கை செய்திகள்

யாழில் தங்கச் சங்கிலியை உரிமையாளரிடம் ஒப்படைத்த பேருந்து சாரதியும், நடத்துனரும்.!

இ.போ.ச. பேருந்தில் பெண் பயணி ஒருவர் தொலைத்த 10 இலட்சம் ரூபாய் பெறுமதியான தங்கச் சங்கிலியை மீட்ட நடத்துநரும் சாரதியும், உரியவரிடமே அந்த நகையை ஒப்படைத்துள்ளனர். இந்தச்…

54 0 0
இலங்கை செய்திகள்

தியவன்னா ஓயாவில் விழுந்த பெண் கடற்படையினரால் மீட்பு.!

பத்தரமுல்ல, ஜப்பான் நற்புறவு வீதியின் சதுன் உயன பகுதியில் இன்று (24) நண்பகல் தியவன்னா ஓயா ஆற்றில் விழுந்த 59 வயதுடைய பெண்ணொருவர் இலங்கை கடற்படையினரால் பாதுகாப்பாக…

60 0 0
இலங்கை செய்திகள்

சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தின மாநாட்டிற்கு அனைவரும் கை கொடுக்க வேண்டும்.!

யாழ்ப்பாணத்தில் எதிர்வரும் 30 ஆம் திகதி இடம்பெற உள்ள சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தையொட்டி முன்னெடுக்கப்படவுள்ள மாநாட்டிற்கு தமிழ் தேசியத்தை விரும்பும் அனைவரும் கை கொடுக்க வேண்டும்…

58 0 0