கெலிவத்தை தமிழ் வித்தியாலய அதிபருக்கு சேவை நலன் பாராட்டு விழா.!
அரச சேவையில் நீண்ட காலமாக அர்ப்பணிப்புடன் பணியாற்றி, கல்வித் துறையில் சிறப்பான பங்களிப்பை வழங்கிய நு/கெலிவத்தை தமிழ் வித்தியாலயம், பத்தனை முன்னாள் அதிபர் S. பீட்டர் ரோய் கெப்ரியல் அவர்களை கௌரவிக்கும் சேவை நலன் பாராட்டு விழா 2025.01.24 அன்று நடைபெற்றது.
இந்த நிகழ்வில், பாடசாலையின் கல்வி வளர்ச்சி, ஒழுக்க மேம்பாடு மற்றும் சமூக பங்களிப்புகளுக்காக அதிபர் மேற்கொண்ட சேவைகள் நினைவுகூரப்பட்டதுடன், அவருக்கு நினைவுச் சின்னமும் பாராட்டு சான்றிதழும் வழங்கப்பட்டன.
இதில் மூன்று முன்னாள் ஆசிரியர்களுக்கும் சேவை பாராட்டு நடைபெற்றது.
விழாவில் ஆசிரியர்கள், பாடசாலை ஊழியர்கள், பெற்றோர், மாணவர்கள் மற்றும் விருந்தினர்கள் கலந்து கொண்டு அதிபரின் சேவையை பாராட்டினர்.





