உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
24 திங்கள்

கால்நடைகளைக் கடத்த முயன்ற கும்பல் மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு.!

இலங்கை செய்திகள் 7 மாதங்கள் முன்
27 பார்வைகள்

நால்ல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தலஹேன சந்திக்கு அருகில் சட்டவிரோதமான முறையில் கால்நடைகளைக் கடத்த முயன்ற கும்பலை கைது செய்ய முற்பட்ட போது இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக நால்ல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்தச் சம்பவம் இன்று அதிகாலை 2.35 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

நால்ல பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த மூன்று உத்தியோகத்தர்கள் முச்சக்கரவண்டி ஒன்றில் இரவு நேர ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, தலஹேன கிராமத்திற்குள் நுழையும் வீதிக்கு அருகில் சந்தேகத்திற்கிடமான முறையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறி ஒன்றைப் பரிசோதித்துள்ளனர்.

அப்போது ஐந்து பேர் கொண்ட கும்பல் ஒன்று, அந்த லொறியில் மாடுகளை ஏற்றிக் கொண்டிருந்தது கண்டறியப்பட்டது.

பொலிஸ் உத்தியோகத்தர்கள் அந்த இடத்திற்குச் சென்றபோது, லொறியில் இருந்த நபர் ஒருவர் அவர்களைத் தாக்க முற்பட்டுள்ளார்.

இதன்போது நிலைமையைக் கட்டுப்படுத்துவதற்காக பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் தனது கடமை நேரத் துப்பாக்கியால் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார்.

இந்தத் துப்பாக்கிச் சூட்டில் கந்தானை பகுதியைச் சேர்ந்த ஒருவர் காயமடைந்துள்ளார்.

இடது கையில் காயமடைந்த அவர், மீரிகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். அவரது நிலைமை கவலைக்கிடமாக இல்லை என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

லொறியில் இருந்த ஏனைய நான்கு சந்தேக நபர்களும் தப்பியோடியுள்ள நிலையில், அவர்களைக் கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை நால்ல பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

யாழ். வலிகாமம் தெற்கு பிரதேச சபையின் புதிய உள்ளக விளையாட்டு அரங்குக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு.!

யாழ்ப்பாணம் – வலிகாமம் தெற்கு பிரதேச சபையின் புதிய உள்ளக விளையாட்டு அரங்குக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று காலை, பிரதேச சபையின் தலைமை அலுவலக வளாகத்தில்…

31 0 0
இலங்கை செய்திகள்

யாழில் தங்கச் சங்கிலியை உரிமையாளரிடம் ஒப்படைத்த பேருந்து சாரதியும், நடத்துனரும்.!

இ.போ.ச. பேருந்தில் பெண் பயணி ஒருவர் தொலைத்த 10 இலட்சம் ரூபாய் பெறுமதியான தங்கச் சங்கிலியை மீட்ட நடத்துநரும் சாரதியும், உரியவரிடமே அந்த நகையை ஒப்படைத்துள்ளனர். இந்தச்…

54 0 0
இலங்கை செய்திகள்

தியவன்னா ஓயாவில் விழுந்த பெண் கடற்படையினரால் மீட்பு.!

பத்தரமுல்ல, ஜப்பான் நற்புறவு வீதியின் சதுன் உயன பகுதியில் இன்று (24) நண்பகல் தியவன்னா ஓயா ஆற்றில் விழுந்த 59 வயதுடைய பெண்ணொருவர் இலங்கை கடற்படையினரால் பாதுகாப்பாக…

58 0 0
இலங்கை செய்திகள்

சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தின மாநாட்டிற்கு அனைவரும் கை கொடுக்க வேண்டும்.!

யாழ்ப்பாணத்தில் எதிர்வரும் 30 ஆம் திகதி இடம்பெற உள்ள சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தையொட்டி முன்னெடுக்கப்படவுள்ள மாநாட்டிற்கு தமிழ் தேசியத்தை விரும்பும் அனைவரும் கை கொடுக்க வேண்டும்…

56 0 0