உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
24 திங்கள்

அடுத்த 15 ஆண்டுகளுக்கு அநுர அரசாங்கத்தை அசைக்கவே முடியாது.!

இலங்கை செய்திகள் 7 மாதங்கள் முன்
25 பார்வைகள்

“ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசை அடுத்த 15 வருடங்களுக்கு அசைக்க முடியாது.” என்று அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார்.

கொழும்பில் நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

“தேசிய மக்கள் சக்தி அரசில் ஊழல், மோசடிக்கு இடமில்லை. நாம் மக்கள் மத்தியில் உண்மையைக் கூறி செயற்பட்டு வருகின்றோம். எனவே, எமது ஆட்சி தொடர்வதற்கு மக்கள் ஆணை வழங்குவார்கள்.

நவீன உலகை வெல்ல வேண்டுமெனில் கல்வி மறுசீரமைப்பு அவசியம். அதனைச் செய்வதற்கே அரசு முயற்சிக்கின்றது.

எனினும், கல்வி மறுசீரமைப்பு நடவடிக்கையில் இடம்பெற்றுள்ள ஒரு பிழையை அடிப்படையாகக் கொண்டு ஒட்டுமொத்த மறுசீரமைப்பையும் குழப்புவதற்கு எதிரணியினர் முற்படுகின்றனர்.

இது எமது நாட்டு பிள்ளைகளின் எதிர்காலத்தைச் சீரழிப்பதற்கு எதிரணியினர் முயற்சிக்கின்றனர்.” – என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

யாழ். வலிகாமம் தெற்கு பிரதேச சபையின் புதிய உள்ளக விளையாட்டு அரங்குக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு.!

யாழ்ப்பாணம் – வலிகாமம் தெற்கு பிரதேச சபையின் புதிய உள்ளக விளையாட்டு அரங்குக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று காலை, பிரதேச சபையின் தலைமை அலுவலக வளாகத்தில்…

31 0 0
இலங்கை செய்திகள்

யாழில் தங்கச் சங்கிலியை உரிமையாளரிடம் ஒப்படைத்த பேருந்து சாரதியும், நடத்துனரும்.!

இ.போ.ச. பேருந்தில் பெண் பயணி ஒருவர் தொலைத்த 10 இலட்சம் ரூபாய் பெறுமதியான தங்கச் சங்கிலியை மீட்ட நடத்துநரும் சாரதியும், உரியவரிடமே அந்த நகையை ஒப்படைத்துள்ளனர். இந்தச்…

54 0 0
இலங்கை செய்திகள்

தியவன்னா ஓயாவில் விழுந்த பெண் கடற்படையினரால் மீட்பு.!

பத்தரமுல்ல, ஜப்பான் நற்புறவு வீதியின் சதுன் உயன பகுதியில் இன்று (24) நண்பகல் தியவன்னா ஓயா ஆற்றில் விழுந்த 59 வயதுடைய பெண்ணொருவர் இலங்கை கடற்படையினரால் பாதுகாப்பாக…

58 0 0
இலங்கை செய்திகள்

சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தின மாநாட்டிற்கு அனைவரும் கை கொடுக்க வேண்டும்.!

யாழ்ப்பாணத்தில் எதிர்வரும் 30 ஆம் திகதி இடம்பெற உள்ள சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தையொட்டி முன்னெடுக்கப்படவுள்ள மாநாட்டிற்கு தமிழ் தேசியத்தை விரும்பும் அனைவரும் கை கொடுக்க வேண்டும்…

56 0 0