உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
24 திங்கள்

நாட்டிற்கு அழைத்து வரப்பட்ட பாதாள உலகக் கும்பலைச் சேர்ந்த குற்றவாளி.!

இலங்கை செய்திகள் 7 மாதங்கள் முன்
31 பார்வைகள்

சர்வதேச பொலிஸாரினால் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டு, வெளிநாட்டில் தலைமறைவாக இருந்த பாதாள உலகக் கும்பலைச் சேர்ந்த குற்றவாளி ஒருவர் இந்தியாவிலிருந்து நேற்று பிற்பகல் விமானம் மூலம் நாட்டிற்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் நாட்டிற்கு அழைத்து வரப்பட்ட பின்னர், கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் பொறுப்பேற்கப்பட்டதுடன், மேலதிக விசாரணைகளுக்காக அவர் வாழைத்தோட்டம் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

இவ்வாறு அழைத்து வரப்பட்டவர் வாழைத்தோட்டம் பகுதியைச் சேர்ந்த 34 வயதுடைய கெசல்வத்தே தினுக்க என தெரிவிக்கப்படுகிறது.

சந்தேகநபருக்கு எதிராக பல கொலைகள், கொள்ளைச் சம்பவங்கள் மற்றும் போதைப்பொருள் வைத்திருந்தமை தொடர்பான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

2015 இல் கெசல்வத்தே பொலிஸ் பிரிவுக்குள் கூர்மையான ஆயுதங்களைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்ட கொலை, 2018 ஆம் ஆண்டு கொட்டாஞ்சேனை பொலிஸ் பிரிவில் துப்பாக்கிச் சூடு மற்றும் கொலைக்கு உதவி செய்தல், 2021 ஆம் ஆண்டு மட்டக்குளி பொலிஸ் பிரிவில் கூர்மையான ஆயுதத்தால் தாக்குதல், 2021 ஆம் ஆண்டு கொட்டாஞ்சேனை பொலிஸ் பிரிவில் கையெறி குண்டு வைத்திருந்தல் மற்றும் கெசல்வத்த, வெள்ளவத்தை மற்றும் புளூமெண்டல் பொலிஸ் பிரிவுகளில் கொள்ளை மற்றும் போதைப்பொருள் வைத்திருந்தல் ஆகிய குற்றச்சாட்டுக்கள் குறித்த நபர் மீது சுமத்தப்பட்டுள்ளன.

சந்தேகநபர் தொடர்பான மேலதிக விசாரணைகள் கொழும்பு பிரிவுக்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மாஅதிபரின் கீழ் முன்னெடுக்கப்படவுள்ளன.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

யாழ். வலிகாமம் தெற்கு பிரதேச சபையின் புதிய உள்ளக விளையாட்டு அரங்குக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு.!

யாழ்ப்பாணம் – வலிகாமம் தெற்கு பிரதேச சபையின் புதிய உள்ளக விளையாட்டு அரங்குக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று காலை, பிரதேச சபையின் தலைமை அலுவலக வளாகத்தில்…

31 0 0
இலங்கை செய்திகள்

யாழில் தங்கச் சங்கிலியை உரிமையாளரிடம் ஒப்படைத்த பேருந்து சாரதியும், நடத்துனரும்.!

இ.போ.ச. பேருந்தில் பெண் பயணி ஒருவர் தொலைத்த 10 இலட்சம் ரூபாய் பெறுமதியான தங்கச் சங்கிலியை மீட்ட நடத்துநரும் சாரதியும், உரியவரிடமே அந்த நகையை ஒப்படைத்துள்ளனர். இந்தச்…

54 0 0
இலங்கை செய்திகள்

தியவன்னா ஓயாவில் விழுந்த பெண் கடற்படையினரால் மீட்பு.!

பத்தரமுல்ல, ஜப்பான் நற்புறவு வீதியின் சதுன் உயன பகுதியில் இன்று (24) நண்பகல் தியவன்னா ஓயா ஆற்றில் விழுந்த 59 வயதுடைய பெண்ணொருவர் இலங்கை கடற்படையினரால் பாதுகாப்பாக…

58 0 0
இலங்கை செய்திகள்

சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தின மாநாட்டிற்கு அனைவரும் கை கொடுக்க வேண்டும்.!

யாழ்ப்பாணத்தில் எதிர்வரும் 30 ஆம் திகதி இடம்பெற உள்ள சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தையொட்டி முன்னெடுக்கப்படவுள்ள மாநாட்டிற்கு தமிழ் தேசியத்தை விரும்பும் அனைவரும் கை கொடுக்க வேண்டும்…

56 0 0