உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
24 திங்கள்

உயர்மட்ட இராஜதந்திர சந்திப்புக்களில் பிரதமர் ஹரிணி.!

இலங்கை செய்திகள் 7 மாதங்கள் முன்
17 பார்வைகள்

சுவிட்சர்லாந்துக்குப் பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய அங்கு உயர்மட்ட இராஜதந்திர சந்திப்புக்களில் ஈடுபட்டு வருகின்றார்.

உலகத் தலைவர்கள் மற்றும் சர்வதேச அமைப்புகளின் பிரதிநிதிகளுடன் அவர் பேச்சு நடத்தி வருகின்றார்.

அந்தவகையில் சிங்கப்பூர் ஜனாதிபதி தர்மன் சண்முகரத்தினத்துடன் இரு தரப்பு கலந்துரையாடலில் பிரதமர் ஈடுபட்டார்.

இதன்போது டித்வா சூறாவளியைத் தொடர்ந்து இலங்கைக்குச் சிங்கப்பூர் வழங்கிய உதவிகளுக்காகப் பிரதமர் நன்றி தெரிவித்தார்.

இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதற்கான வழிகள் குறித்தும் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது என்றும் பிரதமர் கூறினார்.

அதேவேளை, சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜீவாவையும் பிரதமர் சந்தித்து, இரு தரப்பு பேச்சு நடத்தினார்.

இந்தக் கலந்துரையாடல்களில் தொழில் அமைச்சரும் நிதி பிரதி அமைச்சருமான கலாநிதி அனில் ஜயந்த பெர்னாண்டோவும் பங்கேற்றார்.

மேலும் சில சர்வதேச அமைப்புகளின் பிரதிநிதிகளுடனும் பிரதமர் கலந்துரையாடினார்.

சுவிஸில் நடைபெறும் உலக பொருளாதாரமன்ற மாநாட்டில் பங்கேற்க வருகை தந்துள்ள மேலும் சில நாடுகளின் தலைவர்களை அவர் இன்று சந்திக்கவுள்ளார்.

எதிர்வரும் 23 அல்லது 24 ஆம் திகதியளவிலேயே பிரதமர் நாடு திரும்புவார் என அறியமுடிகின்றது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

வீடொன்றுக்குள் புகுந்து தங்க நகைகள் கொள்ளை; 4 பேர் கைது.!

வவுனியாவில் வீடொன்றுக்குள் நுழைந்து 16.750 பவுண் நகைகளை கொள்ளையிட்ட குற்றச்சாட்டில் 4 பேரை வவுனியா குற்றத்தடுப்பு பொலிஸார் கைது செய்துள்ளனர். கடந்த 20ஆம் திகதி வவுனியா, தேக்கவத்தை…

59 0 0
இலங்கை செய்திகள்

வடக்கில் பொலிஸாரின் செயற்பாடுகளில் முன்னேற்றமாம்; இப்படி கூறுகின்றார் ஆளுநர்.!

வடக்கு மாகாணத்தில் பொலிஸாரின் செயற்பாடுகளில் முன்னேற்றம் காணப்படுவதாகச் சுட்டிக்காட்டிய வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன், உயிர்கொல்லி போதைப்பொருள் கட்டுப்பாடு, மணல் மாபியாக்களின் செயற்பாடுகளைத் தடுப்பது மற்றும் வீதிகளில்…

54 0 0
இலங்கை செய்திகள்

தேசிய மக்கள் சக்தியின் நகரசபை உறுப்பினர் ஒருவரின் மகன் உட்பட இருவர் கைது.!

பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்தினர் மேற்கொண்ட விசேட சோதனை நடவடிக்கையின்போது, தேசிய மக்கள் சக்தியின் கொலன்னாவ நகரசபை உறுப்பினர் ஒருவரின் மகன் உட்பட இரு சந்தேகநபர்கள் கைது…

25 0 0
இலங்கை செய்திகள்

சமிந்த விஜேசிறி பிணையில் விடுவிப்பு.!

பொலிஸ் அதிகாரிகள் குழுவொன்றைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்த குற்றச்சாட்டில் குற்றவாளியாகக் அடையாளம் காணப்பட்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்…

42 0 0