உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
24 திங்கள்

நல்லூர் பிரதேச சபையின் உப அலுவலகங்கள் தலைமை அலுவலகத்துடன் இணைப்பு.!

இலங்கை செய்திகள் 7 மாதங்கள் முன்
20 பார்வைகள்

உள்ளூராட்சி மன்றங்களின் ஆளணி மீளாய்வு தொடர்பாக திறைசேரியின் முகாமைத்துவ சேவைகள் திணைக்களத்தினால் வழங்கப்பட்ட ஆலோசனைகளுக்கு அமைவாகவும் தேவையற்ற நிர்வாக செலவுகளை குறைத்து நல்லூர் பிரதேச சபையின் ஆளணிகளை ஒருங்கிணைத்து பொதுமக்களுக்கு வீண் அலைச்சல் அற்ற வினைத்திறனான சேவையினை ஒரே கூரையின் கீழ் வழங்கும் பொருட்டும் நல்லூர் பிரதேச சபையின் நல்லூர் மற்றும் கொக்குவில் உப அலுவலகங்கள் நல்லூர் பிரதேச சபையின் தலைமை அலுவலகத்துடன் இணைக்கப்படவுள்ளதாக நல்லூர் பிரதேச சபையின் தவிசாளர் ப.மயூரன் தெரிவித்துள்ளார்.

ஊடக அறிக்கை மூலமாக இதனை தெரிவித்துள்ளார்.

அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
இதன் பிரகாரம் எதிர்வரும் 09.02.2026 திங்கட்கிழமை முதல் நல்லூர் உப அலுவலகம் தலைமை அலுவலகத்துடன் இணைக்கப்படும். அதே போல் இவ் வருட நடுப்பகுதியில் கொக்குவில் உப அலுவலகம் தலைமை அலுவலகத்துடன் இணைக்கப்படும்.

குறித்த உப அலுவலகங்கள் தலைமை அலுவலகத்துடன் இணைக்கப்பட்ட பிற்பாடு சோலை வரி மற்றும் வருமானப் பகுதி, கட்டுமானத்திற்கான அனுமதி வழங்கும் பகுதி, பொதுமக்கள் முறைப்பாட்டுப் பகுதி போன்ற புதிய கிளைகள் தலைமை அலுவலகத்தில் உருவாக்கப்படும்.

அத்துடன் உப அலுவலகங்கள் ஆயுர்வேத வைத்தியசாலைகளாகவும், மற்றும் சபையின் சுய வருமானத்தினை அதிகரிக்கும் வகையிலும் வேலைவாய்பினை உருவாக்கும் வகையிலும் சுயதொழில் ஊக்குவிப்பு தொழில் மையங்களுக்காவும் மாற்றப்படுவதோடு செயலமர்வுகளுக்கு வாடகைக்கு கொடுப்பதற்கும் பயன்படுத்தப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

வீடொன்றுக்குள் புகுந்து தங்க நகைகள் கொள்ளை; 4 பேர் கைது.!

வவுனியாவில் வீடொன்றுக்குள் நுழைந்து 16.750 பவுண் நகைகளை கொள்ளையிட்ட குற்றச்சாட்டில் 4 பேரை வவுனியா குற்றத்தடுப்பு பொலிஸார் கைது செய்துள்ளனர். கடந்த 20ஆம் திகதி வவுனியா, தேக்கவத்தை…

59 0 0
இலங்கை செய்திகள்

வடக்கில் பொலிஸாரின் செயற்பாடுகளில் முன்னேற்றமாம்; இப்படி கூறுகின்றார் ஆளுநர்.!

வடக்கு மாகாணத்தில் பொலிஸாரின் செயற்பாடுகளில் முன்னேற்றம் காணப்படுவதாகச் சுட்டிக்காட்டிய வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன், உயிர்கொல்லி போதைப்பொருள் கட்டுப்பாடு, மணல் மாபியாக்களின் செயற்பாடுகளைத் தடுப்பது மற்றும் வீதிகளில்…

54 0 0
இலங்கை செய்திகள்

தேசிய மக்கள் சக்தியின் நகரசபை உறுப்பினர் ஒருவரின் மகன் உட்பட இருவர் கைது.!

பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்தினர் மேற்கொண்ட விசேட சோதனை நடவடிக்கையின்போது, தேசிய மக்கள் சக்தியின் கொலன்னாவ நகரசபை உறுப்பினர் ஒருவரின் மகன் உட்பட இரு சந்தேகநபர்கள் கைது…

25 0 0
இலங்கை செய்திகள்

சமிந்த விஜேசிறி பிணையில் விடுவிப்பு.!

பொலிஸ் அதிகாரிகள் குழுவொன்றைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்த குற்றச்சாட்டில் குற்றவாளியாகக் அடையாளம் காணப்பட்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்…

42 0 0