உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
24 திங்கள்

நெல்லுக்கு அரசு நிர்ணயித்த விலையில் கொள்வனவு இல்லை; உடன் நடவடிக்கை எடுக்க கோரிக்கை.!

இலங்கை செய்திகள் 7 மாதங்கள் முன்
18 பார்வைகள்

அரசாங்கம் ஒரு கிலோகிராம் நெல்லுக்கு நிர்ணயித்த விலையில் வன்னி மாவட்டத்தில் கொள்வனவு இடம்பெறவில்லையெனவும் இது தொடர்பில் உடன் நடவடிக்கை எடுக்குமாறும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மருத்துவர் ப.சத்தியலிங்கம் கோரிக்கை விடுத்துள்ளார்.

விவசாய அமைச்சின் அமைச்சு சார் ஆலோசனைக் குழுக் கூட்டம் இன்று (21.01.2026) நாடாளுமன்ற கட்டிடத்தொகுதியில் இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,
எங்களுடைய வன்னி தேர்தல் தொகுதியில் உள்ள மாவட்டங்களில், தை மாதம் முதலாவது கிழமை நெல் அறுவடை தொடங்கி இருக்கின்றது. ஆனால் விவசாயிகள் தங்களுடைய விளைபொருட்களை உரிய விலையில் விற்க முடியாமல் திண்டாடுகிறார்கள்.

அரசாங்கம் நெல்லுக்கான விலையை நிர்ணயித்திருந்த போதிலும், தனியார் நிறுவனங்கள் ஒரு மூட்டை நெல்லை 6400 ரூபய்க்கு கொள்வனவு செய்கிறார்கள். ஒரு மூட்டை நெல்லானது ஏனைய மாவட்டங்களில் 64 கிலோகிராம் ஆக இருக்கும் போது, எங்களுடைய பிரதேசங்களில் 75 கிலோகிராம் என்ற அடிப்படையில் கொள்வனவு இடம்பெறுகிறது. அவ்வாறெனின் அரசின் ஆகக்குறைந்த விலை ஒரு கிலோ 120 ரூபாவாக உள்ளபோது எமது பிரதேசத்தில் 85 ரூபாவிற்கு கொள்வனவு நடைபெறுகிறது இதனை அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு வருகின்றேன் என்றார்.

அதற்குப் பதிலளித்த அமைச்சர்,
உடனடியாக எதிர்வருகின்ற திங்கட்கிழமை முதல் நெல் சந்தைப்படுத்தல் சபையினூடாக எங்களுடைய மாவட்டங்களில் நெல் கொள்வனவை ஆரம்பிப்பதாக உறுதி அளித்திருக்கிறார். இது மிக நல்ல விடயம். ஆகவே விவசாயிகளுக்கு இது ஒரு நல்ல செய்தியாக இருக்கும்.

இரண்டாவதாக, எங்களுடைய மாவட்டங்களில் வனவளத் திணைக்களம் 2014ஆம் ஆண்டு கூகுள் வரைபடத்தின் அடிப்படையில் பொதுமக்களின் பெருமளவான காணியையும் அதே நேரத்தில் குளங்கள், வயல்களை வனவளத் திணைக்களத்திற்குரிய காணியாக அடையாளப்படுத்தி அங்கு மக்கள் தங்களது வாழ்வாதாரத்தைச் செய்ய முடியாத வகையில் தடுத்திருக்கிறார்கள். இந்த விடயம் தொடர்பாக நான் பேசியபோது பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களுடைய மாவட்டங்களிலும் இந்த பிரச்சினை இருப்பதாகவும், இது ஒரு தேசியப் பிரச்சினையாக இருப்பதாகவும் சொல்லியிருக்கிறார்கள்.

அரசாங்க நிதியிலே திருத்தப்பட்ட குளங்கள் கூட வனவளத் திணைக்களத்தினால் கையகப்படுத்தப்பட்டிருக்கிறது. இது தொடர்பாக மாவட்ட ஒருங்கிணைப்புக் கூட்டத்திலும் நாங்கள் பேசியும் எந்தப் பயனும் ஏற்படவில்லை என்பதையும் கௌரவ அமைச்சர் அவர்களின் கவனத்திற்கு அறியப்படுத்துகின்றேன் என்றார்.

பதிலளித்த அமைச்சர் அவர்கள் இரண்டு தீர்வுகளை முன்மொழிந்திருந்தார்.
அதாவது வனவளத் திணைக்களம் மக்களுடைய காணிகளை அடையாளப்படுத்தி அவற்றை உடனடியாக மக்களுக்கு விடுவிக்க வேண்டும்.

இல்லாவிட்டால், அந்தக் காணி வனவளத் திணைக்களத்திற்கு அவசியமானதாகக் கருதப்படுகிற பட்சத்தில், இந்தக் கையகப்படுத்தப்பட்ட காணிகளுக்கான இழப்பீடுகளை மக்களுக்கு வழங்க வேண்டும் என்று சொல்லியிருந்தார்.

இதன்போது மீண்டும் கருத்து தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர்,
இடம்பெயர்ந்த மக்களுடைய காணிகள் வனவளத் திணைக்களத்தால் கையகப்படுத்தப்பட்டிருக்கிறது. அவர்கள் மீள்குடியேற்றத்திற்கு வரும்போது அந்தக் காணிகள் விடுதலை செய்யப்படாமல் இருக்கிறது. இதனால் பலருக்கு வீட்டுத் திட்டம் கூடக் கிடைக்காமல் போயிருக்கிறது. எனவே இவற்றை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்றார்.

அதே நேரம் புயலினால் சேதமடைந்த வயல்களுக்கான இழப்பீடுகளையும், விவசாயிகளுக்கான இழப்பீடு, அதேபோல விவசாயிகளுக்கான உரமானியம் போன்ற விடயங்கள் இதுவரை கிடைக்காதது சம்பந்தமாகவும் சுட்டிக்காட்டப்பட்டது.

அது தொடர்பாகவும் நடவடிக்கை எடுப்பதாக கௌரவ அமைச்சர் அவர்கள் தெரிவித்திருந்தார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

வீடொன்றுக்குள் புகுந்து தங்க நகைகள் கொள்ளை; 4 பேர் கைது.!

வவுனியாவில் வீடொன்றுக்குள் நுழைந்து 16.750 பவுண் நகைகளை கொள்ளையிட்ட குற்றச்சாட்டில் 4 பேரை வவுனியா குற்றத்தடுப்பு பொலிஸார் கைது செய்துள்ளனர். கடந்த 20ஆம் திகதி வவுனியா, தேக்கவத்தை…

59 0 0
இலங்கை செய்திகள்

வடக்கில் பொலிஸாரின் செயற்பாடுகளில் முன்னேற்றமாம்; இப்படி கூறுகின்றார் ஆளுநர்.!

வடக்கு மாகாணத்தில் பொலிஸாரின் செயற்பாடுகளில் முன்னேற்றம் காணப்படுவதாகச் சுட்டிக்காட்டிய வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன், உயிர்கொல்லி போதைப்பொருள் கட்டுப்பாடு, மணல் மாபியாக்களின் செயற்பாடுகளைத் தடுப்பது மற்றும் வீதிகளில்…

54 0 0
இலங்கை செய்திகள்

தேசிய மக்கள் சக்தியின் நகரசபை உறுப்பினர் ஒருவரின் மகன் உட்பட இருவர் கைது.!

பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்தினர் மேற்கொண்ட விசேட சோதனை நடவடிக்கையின்போது, தேசிய மக்கள் சக்தியின் கொலன்னாவ நகரசபை உறுப்பினர் ஒருவரின் மகன் உட்பட இரு சந்தேகநபர்கள் கைது…

25 0 0
இலங்கை செய்திகள்

சமிந்த விஜேசிறி பிணையில் விடுவிப்பு.!

பொலிஸ் அதிகாரிகள் குழுவொன்றைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்த குற்றச்சாட்டில் குற்றவாளியாகக் அடையாளம் காணப்பட்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்…

42 0 0