உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
24 திங்கள்

விசேட சோதனை நடவடிக்கை; சிக்கிய பேருந்து சாரதிகள்.!

இலங்கை செய்திகள் 7 மாதங்கள் முன்
18 பார்வைகள்

கொழும்பு கோட்டை பகுதியில் இன்று புதன்கிழமை (21) தேசிய போக்குவரத்து ஆணைக்குழு, தேசிய போக்குவரத்து வைத்திய நிறுவனம் மற்றும் பொலிஸார் இணைந்து மேற்கொண்ட விசேட சோதனை நடவடிக்கையின் போது போதைப்பொருள் பாவனை செய்யும் பேருந்து சாரதிகள் கண்டறியப்பட்டுள்ளனர்.

இந்த விசேட சோதனை நடவடிக்கை போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சினால் முன்னெடுக்கப்பட்டுள்ள “தேசிய வீதி பாதுகாப்பு” வேலைத்திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டது.

இந்த விசேட சோதனையில், கொழும்பு கோட்டை பகுதிக்கு வருகை தந்த பேருந்துகளின் சாரிகள் வைத்திய பரிசோதனைக்குட்படுத்தப்பட்ட வேளையில் அவர்களில் சிலர் மதுபானம் உள்ளிட்ட ஏனைய போதைப்பொருட்களை பாவனை செய்துள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

இதனையடுத்து போதைப்பொருள் பாவனை செய்யும் பேருந்து சாரதிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த விசேட சோதனை நடவடிக்கை இனிவரும் காலங்களிலும் நாடு முழுவதும் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

வீடொன்றுக்குள் புகுந்து தங்க நகைகள் கொள்ளை; 4 பேர் கைது.!

வவுனியாவில் வீடொன்றுக்குள் நுழைந்து 16.750 பவுண் நகைகளை கொள்ளையிட்ட குற்றச்சாட்டில் 4 பேரை வவுனியா குற்றத்தடுப்பு பொலிஸார் கைது செய்துள்ளனர். கடந்த 20ஆம் திகதி வவுனியா, தேக்கவத்தை…

59 0 0
இலங்கை செய்திகள்

வடக்கில் பொலிஸாரின் செயற்பாடுகளில் முன்னேற்றமாம்; இப்படி கூறுகின்றார் ஆளுநர்.!

வடக்கு மாகாணத்தில் பொலிஸாரின் செயற்பாடுகளில் முன்னேற்றம் காணப்படுவதாகச் சுட்டிக்காட்டிய வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன், உயிர்கொல்லி போதைப்பொருள் கட்டுப்பாடு, மணல் மாபியாக்களின் செயற்பாடுகளைத் தடுப்பது மற்றும் வீதிகளில்…

54 0 0
இலங்கை செய்திகள்

தேசிய மக்கள் சக்தியின் நகரசபை உறுப்பினர் ஒருவரின் மகன் உட்பட இருவர் கைது.!

பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்தினர் மேற்கொண்ட விசேட சோதனை நடவடிக்கையின்போது, தேசிய மக்கள் சக்தியின் கொலன்னாவ நகரசபை உறுப்பினர் ஒருவரின் மகன் உட்பட இரு சந்தேகநபர்கள் கைது…

25 0 0
இலங்கை செய்திகள்

சமிந்த விஜேசிறி பிணையில் விடுவிப்பு.!

பொலிஸ் அதிகாரிகள் குழுவொன்றைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்த குற்றச்சாட்டில் குற்றவாளியாகக் அடையாளம் காணப்பட்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்…

42 0 0