உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
24 திங்கள்

செம்மணி மூன்றாம் கட்ட அகழ்வுக்கு ஒதுக்கப்பட்ட நிதி திறைசேரிக்கு திரும்பியது.!

இலங்கை செய்திகள் 7 மாதங்கள் முன்
19 பார்வைகள்

செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளுக்கு ஒதுக்கப்பட்ட நிதி திரும்பி சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.செம்மணி மனித புதைகுழியில் இருந்து இதுவரையில் இரண்டு கட்டங்களாக மேற்கொள்ளப்பட்ட அகழ்வு பணிகளின் போது, 240 மனித என்புக்கூட்டு எச்சங்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் 239 என்புக்கூட்டு எச்சங்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் மேலும் எலும்புக்கூடுகள் அப்பகுதிகளில் காணப்படுவதால் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளை முன்னெடுக்க வேண்டும் எனவும் , அதற்காக 08 வார கால பகுதி தேவை என சட்ட வைத்திய அதிகாரி மன்றில் விண்ணப்பம் செய்ததற்கு அமைவாக , அதற்கான செலவீன பாதீட்டை மன்றில் சமர்ப்பிக்க உத்தரவிட்டப்பட்டது.

அதன் அடிப்படையில் சட்ட வைத்திய அதிகாரியினால் , மூன்றாம் கட்ட அகழ்வு பணிக்கான பாதீடு தயாரிக்கப்பட்டு , மன்றில் சமர்பிக்கப்பட்டதை அடுத்து , அது அங்கீகரிக்கப்பட்டு , நிதி அமைச்சுக்கு அனுப்பி வைக்கப்பட்டதன் பிரகாரம் , கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் நிதி விடுவிக்கப்பட்டது.அதனை தொடர்ந்து மூன்றாம் கட்ட அகழ்வாய்வு பணிகளை முன்னெடுக்க ஆயத்தங்களை செய்தவேளை , யாழில் நிலவிய சீரற்ற வானிலைகளால் , புதைகுழிக்குள் வெள்ள நீர் தேங்கி நின்றமையால் , அகழ்வாய்வு பணிகள் தொடர்ந்து முன்னெடுக்க முடியாத நிலைமை காணப்பட்டது.

அந்நிலையில் கடந்த ஆண்டு ஒதுக்கப்பட்ட நிதிகளில் செலவு செய்யப்படாத நிதிகள் திறை சேரிக்கு திரும்பியுள்ளது. அதனால் இவ்வாண்டுக்கு மீண்டும் புதிதாக செலவீன பாதீட்டு அறிக்கை தயாரிக்கப்பட்டு , மன்றினால் அது அங்கீகரிக்கப்பட்டு , மீண்டும் நிதி அமைச்சினால் அந்த நிதி மீள ஒதுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

இதேவேளை செம்மணி புதைகுழி பகுதிக்குள் தற்போதும் வெள்ளம் தேங்கி நிற்பதனால் , எதிர்வரும் 09ஆம் திகதி நீதிமன்ற நேரடி கண்காணிப்பில் நல்லூர் பிரதேச சபையினால் , வெள்ள நீரை வெளியேற்றும் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.அன்றைய தினத்திற்கு பின்னரே மூன்றாம் கட்ட அகழ்வு பணிகள் தொடர்பிலான முடிவுகள் எடுக்கப்படும் என நீதிமன்றம் நேற்றைய தினம் திங்கட்கிழமை அறிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

வீடொன்றுக்குள் புகுந்து தங்க நகைகள் கொள்ளை; 4 பேர் கைது.!

வவுனியாவில் வீடொன்றுக்குள் நுழைந்து 16.750 பவுண் நகைகளை கொள்ளையிட்ட குற்றச்சாட்டில் 4 பேரை வவுனியா குற்றத்தடுப்பு பொலிஸார் கைது செய்துள்ளனர். கடந்த 20ஆம் திகதி வவுனியா, தேக்கவத்தை…

58 0 0
இலங்கை செய்திகள்

வடக்கில் பொலிஸாரின் செயற்பாடுகளில் முன்னேற்றமாம்; இப்படி கூறுகின்றார் ஆளுநர்.!

வடக்கு மாகாணத்தில் பொலிஸாரின் செயற்பாடுகளில் முன்னேற்றம் காணப்படுவதாகச் சுட்டிக்காட்டிய வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன், உயிர்கொல்லி போதைப்பொருள் கட்டுப்பாடு, மணல் மாபியாக்களின் செயற்பாடுகளைத் தடுப்பது மற்றும் வீதிகளில்…

54 0 0
இலங்கை செய்திகள்

தேசிய மக்கள் சக்தியின் நகரசபை உறுப்பினர் ஒருவரின் மகன் உட்பட இருவர் கைது.!

பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்தினர் மேற்கொண்ட விசேட சோதனை நடவடிக்கையின்போது, தேசிய மக்கள் சக்தியின் கொலன்னாவ நகரசபை உறுப்பினர் ஒருவரின் மகன் உட்பட இரு சந்தேகநபர்கள் கைது…

25 0 0
இலங்கை செய்திகள்

சமிந்த விஜேசிறி பிணையில் விடுவிப்பு.!

பொலிஸ் அதிகாரிகள் குழுவொன்றைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்த குற்றச்சாட்டில் குற்றவாளியாகக் அடையாளம் காணப்பட்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்…

42 0 0