பரந்தன் இரசாயன தொழிற்சாலை மீள் உருவாக்கம்.!
நீண்ட இடைவேளைக்குப் பிறகு, கிளிநொச்சி மாவட்டத்தின் பொருளாதாரத் தூணாகக் கருதப்படும் பரந்தன் இரசாயன நிறுவனம் மீண்டும் தனது செயல்பாடுகளைத் தொடங்கவுள்ளது.1985 ஆம் ஆண்டு நிலவிய யுத்தச் சூழ்நிலை காரணமாக முழுமையாகச் சேதமடைந்திருந்த இந்தத் தொழிற்சாலை, தற்போது அரசின் கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சின் கீழ் மறுசீரமைக்கப்படவுள்ளது.இந்தத் திட்டத்தின் மிக முக்கிய கட்டமான உற்பத்தி நிலைய கட்டுமானப் பணிகள் 2026 ஜனவரி 21 ஆம் திகதி பிற்பகல் 2.00 மணிக்கு பரந்தனில் அமைந்துள்ள தொழிற்சாலை வளாகத்தில் ஆரம்பமாகவுள்ளன.
கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி மற்றும் பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்க ஆகியோர் இந்த ஆரம்ப நிகழ்வில் முதன்மை விருந்தினர்களாகக் கலந்துகொள்ளவுள்ளனர்.இத்தொழிற்சாலையின் மீள்வருகையானது வட மாகாணத்தின் தொழில்துறை வளர்ச்சியை ஊக்குவிப்பதோடு, அப்பகுதி இளைஞர்களுக்குப் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.