வாகன இறக்குமதியால் அடித்த யோகம் – வெளியான அதிரடித் தகவல்!
வாகன இறக்குமதி மூலம் அரசாங்கம் எதிர்பார்த்ததை விட இருமடங்கு வருமானத்தைப் பெற்றுள்ளதாகப் பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் நிஷாந்த ஜயவீர தெரிவித்துள்ளார்.நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே பிரதியமைச்சர் இதனை குறிப்பிட்டார்.
வாகன இறக்குமதி மூலம் அரசாங்கம் மொத்தம் 904 பில்லியன் ரூபாயை் வருமானத்தை ஈட்டியுள்ளது.ஆரம்பத்தில் 441 பில்லியன் ரூபாய் வருமானமே எதிர்பார்க்கப்பட்டது.ஆனால், தற்போது இலக்கை விட இருமடங்கிற்கும் அதிகமான வருமானம் கிடைத்துள்ளதாக அவர் தெரிவித்தார்.