சிறைச்சாலை நெரிசலைக் குறைக்க புதிய நடவடிக்கை.!
தொடர்புடைய சந்தேகநபர்கள் சிறைகளில் அடைக்கப்படுவதைக் குறைக்கும் நோக்கில் அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார விளக்கம் அளித்துள்ளார்.இதன்படி கடந்த ஆண்டில் பல்வேறு குற்றங்களுடன் தொடர்புடைய 17,000 சந்தேகநபர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்ட பின்னர், அவர்கள் சமூக சீர்திருத்த நடைமுறைக்கு உட்படுத்தப்பட்டனர்.
இந்த நபர்கள் சிறைச்சாலைகளுக்கு வெளியே தடுத்து வைக்கப்பட்டு, முறையான கண்காணிப்பின் கீழ் வைக்கப்பட்டிருந்தனர்.சிறைச்சாலைகளில் நிலவும் அதிகபடியான இடநெருக்கடியைத் தவிர்ப்பதற்காகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இந்த ஆண்டில் சமூக சீர்திருத்தத்திற்கு பரிந்துரைக்கப்படும் நபர்களின் எண்ணிக்கையை மேலும் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டார்.ஐக்கிய மக்கள் சக்தியின் கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்தாணி கிரியெல்ல எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இந்த விபரங்களை வெளியிட்டார்.