உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
24 திங்கள்

இலங்கை காப்புறுதி நிறுவன சட்ட வரைபுக்கு அனுமதி.!

இலங்கை செய்திகள் 7 மாதங்கள் முன்
19 பார்வைகள்

காப்புறுதி துறையின் அறிவு விருத்தி மற்றும் மேம்பாட்டை மையமாகக் கொண்ட நிறுவனமாக செயற்படுவதற்காக 1982 ஆண்டில் இலங்கை காப்புறுதி நிறுவனம் நிறுவப்பட்டுள்ளது. குறித்த நிறுவனம் காப்புறுதி தொடர்பான கல்வி நிகழ்ச்சித்திட்டங்கள், பயிற்றுவித்தல் மற்றும் தொழில்வாண்மை பரீட்சைகளை நடத்தும் இலங்கையின் ஒரேயொரு தொழில்வாண்மை நிறுவனமாகும்.

2000 ஆண்டின் 43 இலக்க காப்புறுதி தொழிற்துறையை முறைமைப்படுத்தும் சட்டத்தின் கீழ் உரிமம் பெற்ற காப்புறுதி முகவர்களாக தகைமை பெறுவதற்காக இலங்கை காப்புறுதி ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் சார்பில் இலங்கை காப்புறுதி நிறுவனத்தினால் நடாத்தப்படும் பரீட்சைகளில் சித்தியடைதல் கட்டாயமானதாகும்இலங்கை காப்புறுதி நிறுவனம் தனது கருமங்களை முறையாக நிறைவேற்றுவதற்கு தேவையான அதிகாரத்தை வழங்குதல் மற்றும் நிதி ரீதியில் நிலைபேறான நிறுவனமாக இயங்குவதற்கான இயலுமை கிடைக்கும் வகையில் இலங்கை காப்புறுதி நிறுவனத்தை கூட்டிணைப்பதற்காக 2018 மற்றும் 2019 ஆண்டுகளில் நிதி விடயதான அமைச்சால் இலங்கை காப்புறுதி நிறுவனத்தை கூட்டிணைப்பதற்கான அடிப்படைச் சட்டமூலம் தயாரிக்கப்பட்டுள்ளது.

குறித்த அடிப்படை சட்ட மூலத்திற்கு சமகால இலங்கை காப்புறுதி ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் ஒப்புதல் கிடைக்கப் பெற்றுள்ளது. மேற்குறித்த அடிப்படைச் சட்ட மூலத்தின் அடிப்படையில் இலங்கை காப்புறுதி நிறுவன சட்ட மூலத்தை தயாரிக்குமாறு சட்ட வரைஞருக்கு ஆலோசனை வழங்குவதற்காக நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சராக ஜனாதிபதி சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

வீடொன்றுக்குள் புகுந்து தங்க நகைகள் கொள்ளை; 4 பேர் கைது.!

வவுனியாவில் வீடொன்றுக்குள் நுழைந்து 16.750 பவுண் நகைகளை கொள்ளையிட்ட குற்றச்சாட்டில் 4 பேரை வவுனியா குற்றத்தடுப்பு பொலிஸார் கைது செய்துள்ளனர். கடந்த 20ஆம் திகதி வவுனியா, தேக்கவத்தை…

58 0 0
இலங்கை செய்திகள்

வடக்கில் பொலிஸாரின் செயற்பாடுகளில் முன்னேற்றமாம்; இப்படி கூறுகின்றார் ஆளுநர்.!

வடக்கு மாகாணத்தில் பொலிஸாரின் செயற்பாடுகளில் முன்னேற்றம் காணப்படுவதாகச் சுட்டிக்காட்டிய வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன், உயிர்கொல்லி போதைப்பொருள் கட்டுப்பாடு, மணல் மாபியாக்களின் செயற்பாடுகளைத் தடுப்பது மற்றும் வீதிகளில்…

54 0 0
இலங்கை செய்திகள்

தேசிய மக்கள் சக்தியின் நகரசபை உறுப்பினர் ஒருவரின் மகன் உட்பட இருவர் கைது.!

பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்தினர் மேற்கொண்ட விசேட சோதனை நடவடிக்கையின்போது, தேசிய மக்கள் சக்தியின் கொலன்னாவ நகரசபை உறுப்பினர் ஒருவரின் மகன் உட்பட இரு சந்தேகநபர்கள் கைது…

25 0 0
இலங்கை செய்திகள்

சமிந்த விஜேசிறி பிணையில் விடுவிப்பு.!

பொலிஸ் அதிகாரிகள் குழுவொன்றைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்த குற்றச்சாட்டில் குற்றவாளியாகக் அடையாளம் காணப்பட்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்…

42 0 0