உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
24 திங்கள்

மிக நீண்ட நாட்களுக்கு பின் திருகோணமலை_கொழும்பு இரவு நேர புகையிரத சேவை ஆரம்பம்!

இலங்கை செய்திகள் 7 மாதங்கள் முன்
21 பார்வைகள்

மிக நீண்ட நாட்களாக தடைப்பட்ட கொழும்பு _திருகோணமலைக்கான இரவு நேர புகையிரத சேவை இன்று (20) இரவு திருகோணமலையில் இருந்து கொழும்பு நோக்கி புறப்பட்டது.கடந்த ஓரிரு மாத காலமாக தடைப்பட்ட  இரவு நேர குறித்த சேவையானது  தற்போது ஆரம்பமானதால் போக்குவரத்து சேவை பொது மக்களுக்காக இலகுபடுத்தப்பட்டுள்ளது.

அரச அதிகாரிகள் கொழும்பு நோக்கி தங்கள் கடமை நிமித்தம் ஆசனப் பதிவுகளை மேற்கொண்டு அதிகமாக இரவு நேர சேவையில் ஈடுபடுகின்றனர். இது போன்று வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகையும் குறித்த புகையிரத சேவை ஊடாக அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இருந்த போதிலும் தம்பலகாமம் பிரதேச சபைக்குட்பட்ட பல புகையிரத கடவைகளில் இரவில் வீதி மின் விளக்குகள் இன்மையால் விபத்துக்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாக காணப்படுகிறது. இது தொடர்பில் தம்பலகாமம் பிரதேச சபை தவிசாளருக்கு பல முறை அறிவித்தும் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படாமை பராமுகமாக இருக்கின்றதை அறிய முடிகிறது. 

எனவே இரவு நேர புகையிரத சேவை மிக நீண்ட நாட்களின் பின் ஆரம்பமானதை போன்று இரவு நேரங்களில் புகையிரத கடவைக்கான வீதி மின் விளக்குகளையும் தாமதமின்றி பொருத்துமாறும் கோரிக்கை முன்வைக்கப்படுகிறது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

வீடொன்றுக்குள் புகுந்து தங்க நகைகள் கொள்ளை; 4 பேர் கைது.!

வவுனியாவில் வீடொன்றுக்குள் நுழைந்து 16.750 பவுண் நகைகளை கொள்ளையிட்ட குற்றச்சாட்டில் 4 பேரை வவுனியா குற்றத்தடுப்பு பொலிஸார் கைது செய்துள்ளனர். கடந்த 20ஆம் திகதி வவுனியா, தேக்கவத்தை…

54 0 0
இலங்கை செய்திகள்

வடக்கில் பொலிஸாரின் செயற்பாடுகளில் முன்னேற்றமாம்; இப்படி கூறுகின்றார் ஆளுநர்.!

வடக்கு மாகாணத்தில் பொலிஸாரின் செயற்பாடுகளில் முன்னேற்றம் காணப்படுவதாகச் சுட்டிக்காட்டிய வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன், உயிர்கொல்லி போதைப்பொருள் கட்டுப்பாடு, மணல் மாபியாக்களின் செயற்பாடுகளைத் தடுப்பது மற்றும் வீதிகளில்…

54 0 0
இலங்கை செய்திகள்

தேசிய மக்கள் சக்தியின் நகரசபை உறுப்பினர் ஒருவரின் மகன் உட்பட இருவர் கைது.!

பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்தினர் மேற்கொண்ட விசேட சோதனை நடவடிக்கையின்போது, தேசிய மக்கள் சக்தியின் கொலன்னாவ நகரசபை உறுப்பினர் ஒருவரின் மகன் உட்பட இரு சந்தேகநபர்கள் கைது…

25 0 0
இலங்கை செய்திகள்

சமிந்த விஜேசிறி பிணையில் விடுவிப்பு.!

பொலிஸ் அதிகாரிகள் குழுவொன்றைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்த குற்றச்சாட்டில் குற்றவாளியாகக் அடையாளம் காணப்பட்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்…

42 0 0