உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
24 திங்கள்

நெல் சந்தைப்படுத்தல் சபையினூடான நெற்கொள்வனவைத் துரித்தப்படுத்துக; ரவிகரன் எம்.பி வலியுறுத்து..!

இலங்கை செய்திகள் 7 மாதங்கள் முன்
16 பார்வைகள்

வன்னிப்பிராந்தியம் உட்பட வடக்கு கிழக்கின் ஏனைய பாகங்களிலும் பெரும்போக நெல் அறுவடை ஆரம்பித்துள்ள நிலையில், நெல் சந்தைப்படுத்தல் சபையினூடாக விவசாயிகளிடமிருந்து நெற்கொள்வனவு மேற்கொள்ளும் செயற்பாட்டை விரைந்து முன்னெடும்முமாறு வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் வலியுறுத்தியுள்ளார்.

நாடாளுமன்றில் 20.01.2026இன்று உரையாற்றும்போதே நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் இவ்வாறு வலியுறுத்தியுள்ளார்.இதுதொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,விரைந்து நெல்சந்தைப்படுத்தல் சபையின் ஊடாக விவசாயிகளிடம் நெற்கொள்வனவை மேற்கொள்வதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவேண்டும்.

குறிப்பாக முல்லைத்தீவு, வவுனியா, மன்னார் உள்ளிட்ட வன்னிப் பிராந்தியத்திலும் வடக்கு, கிழக்கின் ஏனைய பாகங்களிலும் 2025 – 2026ஆம் ஆண்டுகளுக்குரிய பெரும்போக நெற்செய்கையின் அறுவடை தொடங்கியுள்ளது.

இந்நிலையில் அரசினால் உரிய காலத்தில் நெல்லுக்கான நிர்ணய விலை அறிவிக்கப்பட்டுள்ளது. எமது விவசாயிகள் சார்பாக எனது நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.அதேவேளை உரிய காலத்தில் நெல்சந்தைப்படுத்தல் சபையினூடாக விவசாயிகளிடமிருந்து நெல்லினை கொள்வனவு செய்வதற்கான ஏற்பாடுகளையும் மேற்கொள்ளவேண்டும்.நெற்கொள்வனவிலும் தாமதம் ஏற்பட்டால் விவசாயிகள் தனியார் நெல் கொள்வனவாளர்களிடமும், இடைத் தரகர்களிடமும் நெல்லினை குறைந்த விலைக்கு வழங்கி நட்டமடையும் நிலை ஏற்படும்.

வன்னி உட்பட வடக்கு, கிழக்கிலுள்ள விவசாயிகள் இம்முறை வெள்ள அனர்த்தத்தினாலும் மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட நிலையில் காணப்படுகின்றனர்.எனவே விவசாயிகளிடமிருந்து நெற்கொள்வனவை உரிய காலத்தில் நெல்சந்தைப்படுத்தல் சபையின் ஊடாக விரைந்து முன்னெடுக்குமாறு இவ் உயரிய சபையினைக் கோருகின்றேன் – என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

வீடொன்றுக்குள் புகுந்து தங்க நகைகள் கொள்ளை; 4 பேர் கைது.!

வவுனியாவில் வீடொன்றுக்குள் நுழைந்து 16.750 பவுண் நகைகளை கொள்ளையிட்ட குற்றச்சாட்டில் 4 பேரை வவுனியா குற்றத்தடுப்பு பொலிஸார் கைது செய்துள்ளனர். கடந்த 20ஆம் திகதி வவுனியா, தேக்கவத்தை…

54 0 0
இலங்கை செய்திகள்

வடக்கில் பொலிஸாரின் செயற்பாடுகளில் முன்னேற்றமாம்; இப்படி கூறுகின்றார் ஆளுநர்.!

வடக்கு மாகாணத்தில் பொலிஸாரின் செயற்பாடுகளில் முன்னேற்றம் காணப்படுவதாகச் சுட்டிக்காட்டிய வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன், உயிர்கொல்லி போதைப்பொருள் கட்டுப்பாடு, மணல் மாபியாக்களின் செயற்பாடுகளைத் தடுப்பது மற்றும் வீதிகளில்…

54 0 0
இலங்கை செய்திகள்

தேசிய மக்கள் சக்தியின் நகரசபை உறுப்பினர் ஒருவரின் மகன் உட்பட இருவர் கைது.!

பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்தினர் மேற்கொண்ட விசேட சோதனை நடவடிக்கையின்போது, தேசிய மக்கள் சக்தியின் கொலன்னாவ நகரசபை உறுப்பினர் ஒருவரின் மகன் உட்பட இரு சந்தேகநபர்கள் கைது…

25 0 0
இலங்கை செய்திகள்

சமிந்த விஜேசிறி பிணையில் விடுவிப்பு.!

பொலிஸ் அதிகாரிகள் குழுவொன்றைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்த குற்றச்சாட்டில் குற்றவாளியாகக் அடையாளம் காணப்பட்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்…

42 0 0