யாழ். போதனா வைத்தியசாலையில் கணிப்புத் தோற்றப் பரிசோதனைகள் மீண்டும் வழமைக்கு..!
யாழ்ப்பாணம் பொது போதனா வைத்தியசாலையில் கணிப்புத் தோற்றப் பரிசோதனைகள் மீண்டும் வழமைக்கு திரும்பியுள்ளன.கடந்த இரண்டு வாரங்களுக்கும் மேலாக பழுதடைந்த நிலையில் இருந்த கணிப்புத் தோற்றப் பரிசோதனை இயந்திரத்தின் திருத்தப் பணிகள் நிறைவு பெற்றதைத் தொடர்ந்து, இன்று (20.01.2026) காலை முதல் பரிசோதனைச் சேவைகள் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இயந்திரம் பழுதடைந்திருந்த காலப்பகுதியில் நோயாளிகள் பல்வேறு சிரமங்களுக்கு உள்ளாகியிருந்த நிலையில், தற்போது சேவைகள் வழமைக்கு திரும்பியமை பொதுமக்களிடையே நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.இனிமேல் எந்த இடையூறும் இன்றி கணிப்புத் தோற்றப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும் என வைத்தியசாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.