வளர்ச்சிப் பாதையில் இலங்கை.!
இலங்கையின் சேவைத்துறை செயற்பாடுகள், கடந்த 2025ஆம் ஆண்டு டிசம்பரில் விரிவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.இதன்படி, மத்திய வங்கியால் தொகுக்கப்பட்ட கொள்முதல் முகாமைத்துவ குறியீடு 67.9 மதிப்பை பதிவு செய்துள்ளதாக குறிப்பிடப்படுகிறது.
இந்த நிலையானது, டிட்வா சூறாவளி காரணமாக இடையூறுகள் ஏற்பட்ட போதிலும், வணிக செயற்பாடுகளில் வளர்ச்சியை காட்டுவதாக தெரிவிக்கப்படுகிறது.
பண்டிகைக்கால தேவைக்கு மத்தியில் மொத்த மற்றும் சில்லறை வர்த்தகம் இந்த விரிவாக்கத்தின் முதன்மை பங்கு வகிப்பதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.