உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
24 திங்கள்

தியோகுநகர், தீர்த்தக்கரைப் பகுதிகளில் வீதிகள் சீரின்மையால் பாதிப்பை எதிர்நோக்கும் பொதுமக்கள்.!

இலங்கை செய்திகள் 7 மாதங்கள் முன்
28 பார்வைகள்

முல்லைத்தீவு – கரைதுறைப்பற்று பிரதேசசெயலாளர் பிரிவிற்குட்பட்ட சிலாவத்தை தெற்கு தியோகுநகர் மற்றும் தீர்த்தக்கரைப் பகுதியில் வீதிகள் சீரின்றிக்காணப்படுவதால் அவ்வீதிகளைப் பயன்படுத்தும் பொதுமக்கள் பலத்த இடர்பாடுகளுக்கு முகங்கொடுத்துவருகின்றனர்.இந்நிலையில் அப்பகுதிமக்களின் முறையீட்டிற்கமைய வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் நிலமைகளை நேரில் சென்று பார்வையிட்டுள்ளார்.

குறிப்பாக முல்லைத்தீவு – கொக்கிளாய் பிரதானவீதியிலிருந்து தியோகுநகர் ஊடாக தீர்த்தக்கரைவரை செல்லும் தாமரைக்குள வீதி சீரின்றிக்காணப்படுவதால் அப்பகுதியிலுள்ள 350இற்கும் மேற்பட்ட குடும்பங்களும், பாடசாலை மணவர்கள், மீனவர்கள், கடலுணவுகளை கொள்வனவுசெய்வதற்காக வருகைதரும் வியாபாரிகள் எனப் பலரும் போக்குவரத்து இடர்பாடுகளுக்கு முகங்கொடுத்துவருவதாக இதன்போது அப்பகுதி மக்களால் நாடாளுமன்ற உறுப்பினரின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது.

அதுதவிர சிலாவத்தை தெற்கு மற்றும் தீர்த்தக்கரையிலுள்ள உள்ளகவீதிகள், அனர்த்தம் ஏற்பட்டால் கிராமத்தைவிட்டு வெளியேறும் வீதிகள் என அனைத்து வீதிகளும் சீரின்றிக்காணப்படுவதாகவும் இதன்போது அப்பகுதி மக்கள் நாடாளுமன்ற உறுப்பினரிடம் தெரியப்பட்டுத்தினர்.

அதேவேளை கள்ளப்பாட்டிலிருந்து தீர்த்தக்கரையூடாக தூண்டாய்வரை கடற்கரையூடாகச் செல்லும் வீதி தீர்த்தக்கரைப் பகுதியில் மிகமோசமாகப்பாதிக்கப்பட்டுக் காணப்படுகின்றது. இதனால் அவ்வீதியைப்பயன்படுத்தும் பொதுமக்கள், கடற்றொழிலாளர்கள் எனப் பலரும் பாதிக்கப்பட்டுவருகின்றனர்.

இந்நிலையில் குறித்த வீதியின் பாதிப்புநிலமைகளையும் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் இதன்போது பார்வையிட்டார்.இவ்வாறாக குறித்த வீதிகளின் பாதிப்புநிலமைகளைப் பார்வையிட்ட நாடாளுமன்ற உறுப்பினர், குறித்த வீதிகளின் சீரமைப்புத் தொடர்பில் தம்மால் கூடிய கவனம் செலுத்தப்படுமெனத் தெரிவித்தார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

வடக்கில் பொலிஸாரின் செயற்பாடுகளில் முன்னேற்றமாம்; இப்படி கூறுகின்றார் ஆளுநர்.!

வடக்கு மாகாணத்தில் பொலிஸாரின் செயற்பாடுகளில் முன்னேற்றம் காணப்படுவதாகச் சுட்டிக்காட்டிய வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன், உயிர்கொல்லி போதைப்பொருள் கட்டுப்பாடு, மணல் மாபியாக்களின் செயற்பாடுகளைத் தடுப்பது மற்றும் வீதிகளில்…

49 0 0
இலங்கை செய்திகள்

தேசிய மக்கள் சக்தியின் நகரசபை உறுப்பினர் ஒருவரின் மகன் உட்பட இருவர் கைது.!

பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்தினர் மேற்கொண்ட விசேட சோதனை நடவடிக்கையின்போது, தேசிய மக்கள் சக்தியின் கொலன்னாவ நகரசபை உறுப்பினர் ஒருவரின் மகன் உட்பட இரு சந்தேகநபர்கள் கைது…

22 0 0
இலங்கை செய்திகள்

சமிந்த விஜேசிறி பிணையில் விடுவிப்பு.!

பொலிஸ் அதிகாரிகள் குழுவொன்றைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்த குற்றச்சாட்டில் குற்றவாளியாகக் அடையாளம் காணப்பட்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்…

38 0 0
இலங்கை செய்திகள்

நாட்டின் பொருளாதாரம் மற்றும் நீதித்துறையின் பாதுகாப்பு குறித்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி வலியுறுத்தல்.!

கொழும்பில் உள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் இன்றைய தினம் (24) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், கட்சியின் உப செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கலாநிதி சுரேன் ராகவன்,…

46 0 0